Advertisment

பசங்க இருக்கிற இடத்துல இப்படி டிரஸ் போடக் கூடாதா? ஐஷீவை கார்னர் செய்த விசித்ரா

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட நிலையில், முதல்நாளில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Biggboss Vichithra

பிக்பாஸ் விசித்ரா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நேற்று முன்தினம் (அக்டோபர் 01) தொடங்கிய நிலையில், இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Advertisment

இதில் முதலில் இந்த வார கேப்டன் விஜய் வர்மாவை அழைத்த பிக்பாஸ் நீங்கள் 6 லீஸ்ட் ஃபர்ஃபாமரை லிஸ்ட் பண்ணி நாளைக்கு அதை நான் கேட்கும்போது சொல்ல வேண்டும் அதனால் இப்போது இருந்தே நீங்கள் கண்கானிக்க தொடங்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனைத் தொடர்ந்து இரவில் இருந்து அடுத்த நாள் காலை வரை போட்டியாளர்கள் அனைவரையும் விஜய் வர்மா நோட்டமிட்டுள்ளார்.

தொடர்ந்து அடுத்த நாள் காலை பிக்பாஸ் 6 லீஸ்ட் ஃபர்ஃபாமர் யார் யார் என்று கேட்க, லிஸ்டை கொடுக்கிறார் கேப்டன் விஜய் வர்மா. இதற்கிடையே எழுத்தாளர் பாவா செல்லதுரை தன்னை யாரும் பெரியவர் என்று கூப்பிட வேண்டாம் ப்ரோ அல்லது பாவா என்று கூப்பிடுங்கள் என்று சொல்ல, அதை கேட்டு விஜய் வர்மா பெரியவரை எப்படி பேர் சொல்லி அழைப்பது என்று கேட்க, பெயர் சொல்லி கூப்பிட தானே வைத்திருக்கிறார்கள் என்று பாவா செல்லதுரை சொல்கிறார்.

இதற்கு முன்னதாக அனைவரும் தங்களை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தபோது, வனிதாவின் மகள் ஜோவிகா பேசும்போது, எனக்கு படிப்பில் ஆர்வம் இல்லாததால், உனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் பொ என்று அம்மா சொல்லிட்டாங்க அதனால் நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன் என்று சொல்லும்போது, யுகேந்திரன் நீ ஒரு ஃபீல்டை தேர்வு செய்தால் அதற்கு ஏற்ற படிப்பை படிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

நான் அடுத்து அதைத்தான் படிக்க போகிறாறேன் என்று ஜோவிகா சொல்ல, குறிக்கிட்ட விசித்ரா, யாரா இருந்தாலும் 12-ம் வகுப்புவரை படித்து முடித்துவிடுங்கள். அதன்பிறகு படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம் என்று சொல்கிறார். இதை கேட்ட ஜோவிகா இதை பற்றி இன்னும் பேச நான் விரும்பவில்லை. வேற எதாவது பேசலாம் என்று சொல்லிவிடுகிறார். அடுத்த நாள் காலை அனைவரும் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது சிறிய உடையுடன் டான்ஸ் ஆடிய நடிகை ரவீனா இறுதியில் மணி மீது ஏறி அமர்ந்துகொண்டார். அதன்பிறகு கேப்டன் தேர்வு செய்த பாவா செல்லதுரை விணுஷா தேவி உள்ளிட்ட 6 பேரும் சுமால் பாஸ் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இவர்கள் செல்வதற்கு முன் நாங்களாம் வந்து இன்னும் ஒரு நாள் கூட ஆகல இவங்க பேர் என்னானு கூட எனக்கு தெரியாது அதுக்குள்ள இவங்கா அனுப்புறது சரியில்லை என்று கூல் சுரேஷ் சொல்ல, பிக்பாஸ் அந்த 6 பேரையும் கிளம்ப சொல்லி கூல் சுரேஷ்க்கு பல்ப் கொடுத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் நாமினேஷன் குறித்து பேசினார்கள் இதில் பலரும் நடிகை ரவீனாவை நாமினேட் செய்வதாக கூறிய நிலையில், இறுதியாக பேச வந்த விசித்ரா, நான் ஐஷூவை நாமினேட் செய்கிறேன். அந்த பெண் போட்டிருந்த ட்ரெஸ் சரியில்லை. பசங்க இருக்கும் வீட்டில் அந்த பெண் உட்காருவது சரியில்லை. மேக்கப்பும் சரியில்லை என்று பல சர்ச்சையாக காரணங்களை கூறியிருந்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

biggboss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment