Advertisment

கமல்ஹாசன் இடத்தில் விஜய் சேதுபதி: கலக்கலாக வந்த ப்ரமோ; தமிழ் பிக்பாஸ் 8 சீசன் எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் விரைவில் வெளியாக உள்ள நிலையில், நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
https://indianexpress.com/article/entertainment/tamil/bigg-boss-tamil-vijay-sethupathi-steps-into-kamal-haasans-shoes-teases-grandeur-of-season-8-watch-9551985/

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் சேதுபதிக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது.

Advertisment

Read In English: Bigg Boss Tamil: Vijay Sethupathi steps into Kamal Haasan’s shoes, teases grandeur of season 8. Watch

ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில், கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளது.  இந்த 7 சீசன்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி எழுந்தது. இதில் சூர்யா, விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் பெயர்கள் அடிப்பட்ட நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விஜய் டிவி இதற்கான புதிய ப்ரமோவையும் தற்போது வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நேற்று ப்ரமோ வெளியிட்டனர்.

விஜய் சேதுபதியின் பிரமாண்டமான பிரவேசத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தொடங்குகிறது, இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் புதிய உற்சாகம் பெற்றுள்ளது. ப்ரோமோவில் உள்ள காட்சிகள் இந்த சீசனின் வீட்டின் பிரம்மாண்டத்தை சுட்டிக்காட்டுகின்றன. இது நவீன வடிவமைப்பு மற்றும் ஆடம்பரமான வசதிகளின் கலவையாக உள்ளது.  விஜய் சேதுபதி ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குவது இது முதல் முறை அல்ல. முன்னதாக,மாஸ்டர் செஃப் தமிழ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2 படத்தில் நஎடித்து வருகிறார், வெற்றிமாறன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான வெளியான நிலையில், இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாய தயாராகியுள்ள விடுதலை 2 படம், நடப்பு ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Bigboss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment