scorecardresearch

Bigg Boss Tamil 6: தேதி குறிச்சாச்சு… போட்டியாளர்கள் இவர்கள்தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடைசி 2 சீசன்கள் அக்டோபரில் தொடங்கப்பட்டது.

Bigg Boss Tamil 6: தேதி குறிச்சாச்சு… போட்டியாளர்கள் இவர்கள்தானா?

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் கடந்த சீசனில் கொரோனா தொற்றால் கமல்ஹாசன் பதிக்கப்பட்டிருந்தபோது ஒருவாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் முடிந்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன். நிகழ்ச்சியின் கடைசியில் விக்ரம் பட ஷூட்டிங்கிற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியறினார் அதன்பிறகு நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்னிகினார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனையும் வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடைசி 2 சீசன்கள் அக்டோபரில் தொடங்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சின் 6-வது சீசன் வழக்கமான மாதத்தில் தொடங்க உள்ளது.

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஜூலை இறுதியில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சி விஜய் டிவி மட்டுமல்லாது ஒடிடி தளத்திலும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில். அண்மையில் இரண்டாம் திருமணம் செய்த இசை அமைப்பாளர் ஒருவரின் முன்னாள் மனைவி இந்த சீசன் 6-ல் போட்டியாளராக வரலாம் என பேசப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil reality show biggboss season six starting date update in tamil

Best of Express