Biggboss Promo Updte In Tamil : விஜய் டிவியின் பிக்பாஸ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், முன்னணி நடிகரான கமல்ஹாசன் 4 சீசன்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில், ரசிகர்களிள் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது.
வழக்கத்திற்கு மாறாக பல புதுமுகங்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் நடிகர் இமான் அண்ணாச்சி, வருண், சின்னத்திரை நடிகர் ராஜூ ஜெயமோகன் விஜே பிரியங்கா உட்பட 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். வார நாட்களில் போட்டியாளர்கள் செய்யும் செயல்கள் அவர்களின் நடத்தை உள்ளிட்ட செயல்களை கண்காணித்து கார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம்.
கடந்த வாரம் ஞாயிற்று கிழமை தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் 2 நாட்கள் போட்டியாளர்கள் தங்களுக்குள் அறிமுகம் செய்துகொண்டனர். இதில் அனைவரும் தங்களது வாழ்கையில் சந்தித்த சோகம், கஷ்டங்கள் கடந்து வந்த பாதை உள்ளிட்ட பல்வேறு நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இதில் ஒரு சிலரின் நினைவுகள் போட்டியாளர்கள் மட்டுமல்லது ரசிகர்களும் கண்ணீரை வரவழைக்கும் விதமாக இருந்தது. அவர்களுக்கு ரசிகர்கள் கமெண்ட் மூலமாக ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து 4-வது நாளில் இருந்து பிக்பாஸ வீட்டில் மோதல் போக்கு தொடங்கியது. முதல்கட்டமாக சிபி சந்திரன் மற்றும் நிரூப் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், நேற்று தாமரைச் செல்வி மற்றும் நமீதா மாரிமுத்து இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் எல்லை மீறிய நமீதா மாரிமுத்து என்னைப்பற்றி யாராவது பேசியால் அசிங்க அசிங்கமாக கேட்பேன் யார் இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லியிருந்தார்.
அவரின் இந்த பேச்சு பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அதிச்சியில் ஆழ்த்திய நிலையில், ரசிகர்கள் பலரும் அவரின் பேச்சுக்கு கடும் கண்டனைத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தொடக்கத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வார இறுதி எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிக்பாஸ் 5-வது சீசனில் கமல்ஹாசன் தற்போது முதல் முறையாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த ப்ரமோவில் பேசும் கமல்ஹாசன், பிரியங்கா அபிஷேக், மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் பற்றி பேசுகிறார். இதில் இந்த வாரம் எலிமினேஷனில் நமிதா மாரிமுத்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. நேற்றைய நாளில் அவர் எல்லை மீறி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் விளைவாக அவர் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil