Advertisment

பிரியங்கா - மணிமேகலை விவகாரம்: வெளிப்படையாக பேசிய புகழ்; உண்மை வெளி வருமா?

தற்போது விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், புகழ் பேசியது வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Pugazh Mani Pri

விஜய் டிவியின் பிரியங்கா – மணிமேகலை இடையேயனா மோதல் பிரச்னை இன்றும் தீராத நிலையில், விஜய் டிவி பிரபலங்கள் இது குறித்து வெளிப்படையாக கருத்து சொல்வதை தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் புகழ் இது தொடர்பான கேள்விக்கு கோபமாக பேசியுள்ளார்.

Advertisment

ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. காமெடி ஷோவான இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 5-வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த சீசனில், ரக்ஷனுடன், மணிமேகலை தொகுப்பாரளாக களமிறங்கினார். வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து தாமுவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வந்துள்ளார்.

அதேபோல் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கண்டஸ்ட்ண்டாக பங்கேற்றுள்ளார். அதே சமயம் இந்த நிகழ்ச்சி தொடங்கியதில், இருந்து பிரியங்கா தான் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது போல் நடந்துகொள்வதாகவும், எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்றும் கூறிய மணிமேகலை கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அதே சமயம் தற்போது விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் குரேஷி, பிரியங்காவை பேச விடாமல் தடுத்தவர் மணிமேகலை தான். அதேபோல் ரக்ஷனை பேச விடாமல் இவரே பேசிக்கொண்டு இருக்கிறார். இதில் ரக்ஷனுக்கு தன்மானம் இல்லையா என்று கேட்டுள்ளார்.

அந்த வகையில், பிரியங்கா – மணிமேகலை தொடர்பான விவகாரம் குறித்த கேள்விக்கு நடிகர் புகழ் காட்டமாக பதில் அளித்துள்ளார். உங்களை போல் நானும் நிகழ்ச்சியை டிவியிலும், சோஷியல் மீடியாவிலும் தான் பார்க்கிறேன். அது அவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்னை. உங்களுக்கும் எனக்கும் பிரச்சனை என்றால் நாம் பேசாலம். ஆனால் அதை சோஷியல் மீடியா வரை கொண்டு வர கூடாது. உங்களை மாதிரி தான் எங்களுக்கும் அவர்களுக்கு இடையே என்ன பிரச்னை என்று எனக்கு தெரியாது. சேனலுக்கு வருமா என்றும் தெரியாது.

இந்த பிரச்னை பொதுவெளிக்க வந்துள்ளது. ஒரு வீடியோவை பார்த்துவிட்டு 1000 வீடியோக்கள் போடுகிறார்கள். இந்த பிரச்னை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரட்டும் பார்க்கலாம். இந்த விஷயத்தில் நடந்தது என்ன என்று தெரிந்துகொள்ளாமலே கேமராவை தூக்கிக்கொண்டு வந்து கருத்து கேட்க வேண்டாம். எது நடந்தாலும் அதை அவர்கள் இருவரும் தான் சரி செய்ய வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அதில் கோமாளியாக இருந்து வரும் புகழ், செட்டில் என்ன நடந்தது என்பது குறித்து சொல்வதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக காமெடியாகவும் காட்டமாகவும் பதில் சொல்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Cooku With Comali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment