பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் வனிதாவின் மகள் ஜோவிகா நடிகை விசித்ராவிடம் ஆக்ரோஷமாக பேசுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Advertisment
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி பிரம்மாண்டாக தொடங்கப்பட்டது. பவா செல்லதுரை, யுகேந்தரன், விணுஷா சரவண விக்ரம் உள்ளிட்ட பலருடன் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் குறைந்த வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர் என்ற சிறப்பினை பெற்றுள்ள ஜோவிகா முதல் நாளில் இருந்தே அம்மாவுக்கு சமமாக அசத்தி வருகிறார்.
கடந்த சீசன்களில் பங்கேற்ற வனிதா விஜயகுமார், பிக்பாஸ் வீட்டையே ரெண்டாக்கும் விதமாக பரபரப்பாக இயங்கி நிகழ்ச்சியில் பல அதிரடி திருப்பங்களை அரங்கேற்றினார். இந்த சீசனில் அவரது மகள் பங்கேற்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியான உடனே பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் அம்மாவை போல் அதிரடியாக இருப்பாரா? அல்லது அடக்கி வாசிப்பாரா என்ற கேள்வியுடன் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்.
Advertisment
Advertisements
ஆனால் ரசிகர்களின் கேள்விக்கு ஜோவிகா முதல் நாளிலேயே பதிலடி கொடுத்தார். தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9-ம் வகுப்புடன் நின்றுவிட்டதாக ஜோவிகா கூறியிருந்தார். இதை கேட்டு நடிகை விசித்ரா எப்படி இருந்தாலும் 12-ம் வகுப்பு வரை அடிப்படை கல்வி முக்கியம் என்று கூறினாலும் அதை கண்டுகொள்ளாத ஜோவிகா வேறு விஷயத்தை பேசி விசித்ராவுக்கு நோஸ்கட் கொடுத்திருந்தார்.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற பிளாக்டு அன் வெரிஃபைடு நிகழ்ச்சியில் சரவண விக்ரமுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோவிகா எல்லோரும் எனது படிப்பை பற்றியே பேசுகிறார்கள். எனக்கும் படிக்க ஆசை இருந்தது. ஆனால் எனக்கு படிப்பு வரவில்லை. அதனால் எனக்குள் இருக்கும் திறமையை கண்டறிய முயற்சித்தேன். இதற்கு என் அம்மாவும் சப்போர்ட் செய்தார் என்று கூறியிருந்தார். இதற்கு ஹவுஸ்மெட் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இதனிடையே இன்று வெளியாகியுள்ள ப்ரமோவில், முதலில் பேசும் நடிகை விசித்ரா, நான் ஜோவிகாவின் படிப்பை பற்றி பேசவில்லை. பேசிக் கல்வி அனைவருக்கும் தேவை என்றுதான் சொன்னேன் என்று சொல்ல உடனே குறுக்கிடும் ஜோவிகா, எல்லோரும் படிச்சி பெரிய ஆளாக வேண்டும் என்பது இல்லை என்று சொல்கிறார். இதற்கு விசித்ரா குறுக்கே வர நான் பேசிக்கிட்டு இருக்கேன் என்று ஜோவிகா பேசுகிறார்,
தொடர்ந்து படிப்பு என்ற விஷயத்தை நிறைய குழந்தைகள் தப்பான விஷயத்தில் போகுது அதை ரிப்ரசன்ட் பண்ணித்தான் நான் இங்கு வந்துருக்கேன் என்று ஜோவிகாக சொல்ல ஹவுஸ்மெட்ஸ் பலரும் அதற்கு கைத்தட்டுகின்றனர். அதை கேட்டு விசித்ரா நான் சொன்னதுக்கும் நீ சொன்னதுக்கும் என்று எதோ சொல்லவர நான் பேசிக்கிட்டு இருக்கேன் என்று ஜோவிகாக கத்துகிறார். இதை கேட்டு விசித்ரா அமைதியாகிறார்.
இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், ஜோவிகாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் ஒருசிலர், இந்த வயிதில் எவ்வளவு தெளிவான பேச்சு உண்மையைனா வார்த்தை அருமை ஜோவிகா என்றும், வனிதா 8அடி என்றால்... ஜோவிகா 16அடி இல்லை 64 அடி என்றும்,வனிதாவை விட ஜோவிகா ரொம்ப பக்குவம் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“