காமெடி கெட்டப் தான்… இருந்தாலும் வருத்தமா இருக்கு… அறந்தாங்கி நிஷாவின் உருக்கமான பதிவு

Tamil Reality Show : பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

Aranthangi Nish Vadivelu Getup Viral : பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் ரசனைக்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டிவிக்கு நிகர் யாரும் இல்லை என்று சொல்லாம். அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பிடித்தமான ரியாலிட் ஷொக்கள், சீரியல்கள் என பல நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து மற்றொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது

இதபோன்ற ரியாலிட்டி ஷோக்களில் பல நகைச்சுவை கலைஞர்கள் பங்கேற்று தஙகளது திறமைகளை நிரூபித்து வருகினறனர். அந்த வகையில் பெரும்பாலும் விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருபவர் அறந்தாங்கி நிஷா. போட்டியாளராக மட்டுமல்லாமல், நிகழ்ச்சி தொகுபபாளராகவும் பங்கேற்று வரும் இவர், கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து விஜய்டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் நிஷா டிவி தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்காக வடிவேல் பாலாஜி கெட்டப்பில் தோன்றியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிஷா, நிகழ்ச்சியில் இந்த கெட்டப் போட்டு அடுத்த நிமிஷம், எல்லாரும் சொன்ன வார்த்தை வடிவேல் பாலாஜி மாதிரியே இருக்கமா, அப்படி தான் சொன்னாங்க

ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அண்ணா, செட்ல எல்லாருமே உங்கள ரொம்ப மிஸ் பண்றோம். மக்களை சந்தோஷப்படுத்துவது மட்டும் தான் நம்ம வேலை, அதை தொடர்ந்து செஞ்சிட்டே இருப்போம், எப்பவும் உங்க நினைவுகளோடு” என என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நிஷாவா இது என்று ஆச்சரியத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality show contestant aranthangi nisha viral getup

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com