Cook With Comali Ashwin Instagram viral Photos : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அஸ்வின் தற்போது தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் குறித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்து வருகிறது. அதிலும் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி முதல் சீசன் முடிந்து 2-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், சிவாங்கி, புகழ், அஸ்வின், நடிகை ஷசிலா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வரும் நிலையில், ரக்க்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக உள்ள அனைவருக்கும் தனித்தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் முக்கியமாக தனது அழகான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் அஸ்வினுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதில் அஸ்வினும் சிவாங்கியும் சேர்ந்து செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிப்பதற்கே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். சீரியலுக்கு கிடைக்கு வரவேற்பை விட வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கு பிடித்தமான நாயகனாக வலம் வரும் அஸ்வின், பல விளம்பங்களில், மாடலாகவும் சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் இவரை அடையாளம் காட்டியது குக் வித் கோமாளி நகழ்ச்சிதான் என்பது தவிர்க்க முடியாத உண்மை. ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட இவரை பலர் தாழ்வாக பேசியுள்ளனர். சினிமா உங்களுக்கு செட்டாகாது. உனக்கு கொஞ்சம் கூட நடிப்பு வரவில்லை என்று எல்லோரும் அலச்சியப்படுத்தியுள்ளனர்.
ஆனாலும் மனம் தளராத அஸ்வின் தனது விடாமுயற்சியினால் தற்போது இந்த நிலையை எட்டியுள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக இவருக்கு சமீபத்தில் விருது கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு ஏழு வருடங்கள் ஆகியிருக்கிறது. ஆனால் தற்போது இப்படிப்பட்ட ஒரு விருது கிடைப்பது என்னால் மறக்க முடியாது என்று கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில், நீங்கள் மேலே உயர்வீர்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் அஸ்வின் பெரும் சந்தோஷத்தில் உள்ள நிலையில், அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவரும் ஷிவாங்கியும் ரொம்பவே ஆர்வமாக பேசிக் கொண்டிருக்கும் போட்டோக்களும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து புகைப்படத்தையும், அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
இதனை பார்த்து அவர்களுடைய ரசிகர்கள் இவர்கள் இருவரும் அப்படி என்ன தீவிரமாக பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், மேடையில் விருது வாங்கும்போது அஸ்வின் கண்ணீர்விட்டு கதறி அழுத போட்டோக்களும் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் ஷிவாங்கி பாணியில் அஸ்விநே..... என்று அழைத்து வருகின்றனர். ஆனால் பாருங்க அஸ்வினுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்க ஷிவாங்கியும்தான் ஒரு காரணம் என்பது உண்மை
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"