New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/cook-with-comali2.jpg)
Tamil Reality Show : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி சுற்று படப்பிடிப்பு முடிந்த நிலையில், அந்த செட்டில் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படத்தை அஸ்வின் பதிவிட்டுள்ளார்.
Cook With Comali Ashwin Viral Photo : குக் வித் கோமாளி செட்டில் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் என அந்நிகழ்ச்சியின் நட்சத்திரமாக அஸ்வின் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் ஷோ குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனைவிட 2-வது சீசன் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சியை சீக்கிரம் முடிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் கடந்த சில வாரங்களாக புதிய விதிகளை உருவாக்கி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த இரண்டாம் சீசனின் கிராண்ட் ஃபினாலே நாளை தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக உள்ளது. இதனை பார்க்க ரசிகர்கள் அனைவரும் அதை பார்க்க மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த சீசனில் பெரும் வரவேற்பை பெற்ற ஜோடிகள் புகழ் - பவித்ரா, அஸ்வின் - ஷிவாங்கி ஜோடி தான். இதில் அண்ணன் தங்கை என சிவாங்கி - புகழ் இருவரின் ரகளைகளும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் குக் வித் கோமாளி செட்டில் அஸ்வின் உடன் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை ஷிவாங்கி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை எடுத்து தனது கணக்கில் பதிவிட்டு இருக்கும் அஸ்வின், 'இது தான் குக் வித் கோமாளியில் எடுத்த கடைசி புகைப்படம் என பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே உடன் நிறைவுபெற்றதால் குக் வித் கோமாளி சீசன் 2 நிறைவுபெற்றதால், குக்குகள் மற்றும் கோமாளிகள் மிகவும் எமோஷ்னலாக தான் விடை பெற்று கொண்டு கிளம்பினர். இந்நிலையில், தற்போது அஸ்வின் போட்டிருக்கும் பதிவும் வைரலாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.