Advertisment

கண்ணீர் விட்டு அழுத புகழ்... வெளியான எமோஷனல் வீடியோ

Tamil Reality Show Update : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற புகழ் தற்போது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

author-image
WebDesk
New Update
கண்ணீர் விட்டு அழுத புகழ்... வெளியான எமோஷனல் வீடியோ

Cook With Comali Emotional Video : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற புகழ் தற்போது ட்ப்பிங்கில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருவது குக் வித் கோமாளி. சமையல் கலைஞர்களுடன் கலந்துகொள்ளும் கோமாளிகள் செய்யும் காமெடி அட்ராசிட்டிகள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் புகழ் பெற்றுள்ளனர். அந்த வகையில் குக் வித் கோமாளியில் புகழ் பெற்ற காமெடி கலைஞர்களில் ஒருவர் புகழ்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரது காமெடிக்காகவே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் தனது காமெடியின் மூலம் ரசிர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே இழுத்துச்செல்லும் புகழ் தற்போது அடுக்கடுக்கான படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். அந்த வகையில் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் புதிய படத்தில் ஒப்பந்தமான புகழ் அதனைத் தொடர்ந்து, சிம்புவின் மாநாடு, சந்தானத்துடன் ஒரு படம், விஜய் சேதுபதியின் அடுத்த படம் என எண்ணற்ற படங்களில் நடித்து வருகிறார்.

publive-image



இந்நிலையில் தற்போது புகழ் நடித்து வரும் ஒரு படத்தின் இருதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த படத்தின் டப்பிங் பணிகளில் புகழ் மும்பரமாக ஈடுபட்டு வருகிறார். இதில் டப்பிங் பேசிய புகழ் படத்தில் வரும் ஒரு கட்சிக்காக கண்ணீர் விட்டு அழுது டப்பிங் பேசி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை அவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், இது வரை புகழ் காமெடி செய்து தான் பார்த்திருக்கிறோம், ஆனால் இப்படி எமோஷ்னலாக நடித்து இருக்கிறாரே என்று அனைவரும் சற்று ஷாக் ஆகி வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Reality Show Cook With Comali Pughal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment