குக் வித் கோமாளி ‘சாம்பியன்’ கனி: ‘வனிதாவை விட பெஸ்ட்’ என நடுவர்கள் பாராட்டு

Tamil Reality Show : ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2-ல் கனி திரு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Cook With Comali Grand Finale 2021 : விஜய் டிவியின் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி திரு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் தனி மரியாதை அளித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு ஒளிரப்பான இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த ஷோவின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது.

சமையல் மற்றும் காமெடி கவுணடர்கள் நிறைந்த இந்த ஷோவில் அஸ்வின், கனி திரு, பாபா பாஸ்கர், ஷகீலா, பவித்ரா லட்சுமி உட்பட பலர் குக்குகளாக பங்கேற்ற நிலையில், பாலா, புகழ், சிவாங்கி, தங்கதுரை,மணிமேகலை, சரத் ராஜ், உள்ளிட்ட பலர் கோமாளிகளாக தினந்தோறும் தங்களது அட்ராசிட்டியை நடத்தி வந்தனர். தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற இந்த ஷோவின் அரையிறுதி போட்டியில், கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா லட்சுமி, ஷகீலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இதனையடுத்து கடந்த இரு வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த ஷோவில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று ஒளிபரப்பானது. 3 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், அதிக புள்ளிகள்பெற்ற கனி திரு சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பழம்பெரும் இயக்குநர் அகத்தியனின் மூத்த மகளும், தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் இயக்குநரின் மனைவியுமான கார்த்திகா (எ) குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொடக்த்தில் இருந்தே தனது சமையல் கலையின் மூலம் நன்மதிப்பை பெற்று வந்தார். இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அவருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என கணிக்கப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அவர், அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா லட்சுமி, ஷகீலா ஆகியோருடன் இறுதிசுற்றில் மோதினார். 3 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த இறுதிப்போட்டியில் 30 மதிப்பெண்களுக்காக நடத்தப்பட்ட முதல் ரவுண்ட்டில் கனி 20 மதிப்பெண்கள் பெற்று கடைசி இடம்பிடித்தார். இதில் 29 மதிப்பெண் பெற்ற அஸ்வின் முதலிடம் பிடித்தார். இதனால் டைட்டில் வின்னருக்கான போட்டியில் அஸ்வின் முதலிடத்தில் இருந்தார். தொடர்ந்து 40 மதிப்பெண்கள் கொண்ட 2வது சுற்று நடத்தப்பட்டது.

இதில் இந்திய பாரம்பரியமான 5 உணவுகளை வெளிநாட்டு முறைப்படி செய்து அசத்திய கனி அந்த சுற்றில் 35 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் கடந்த சீசனில் வெற்றி பெற்ற வனிதா விஜயகுமார் கொடுத்த பிரஷன்டேனஷனை விட ஒரு படி மேலே கொடுத்துள்ளீர்கள் என்று நடுவர்களிடம் இருந்து பாராட்டையும் பெற்றார். இதன் மூலம் 2-வது சுற்றிலேயே சாம்பியன் பட்டம் வெல்வதை கிட்டதட்ட உறுதி செய்த கனி 3-வது சுற்றிலும் தனது சமையல் மூலம் நடுவர்களை அசத்தினார். இதனால் 3-வது சுற்றையும் சேர்த்து 84 புள்ளிகள் பெற்ற அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

வெற்றி பெற்ற அவருக்கு 19 ஆயிரம் மதிப்புள்ள கிச்சன் பொருட்களும், 5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. முன்னதாக இந்த நிகழ்ச்சியின் முதல் சுற்றின் முடிவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக வீடியோ காலிங் மூலம் கலந்துகொண்டார். தொடர்ந்து 2-வது சுற்றில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்ட நிலையில், 3-வது சுற்றில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்திரான கலந்துகொண்டு அனைவருக்கும் விருதுகள் வழங்கினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality show cook with comali grand finale champion kani thiru

Next Story
Sembaruthi Serial: எம்.எல்.ஏ மகனை அறைந்த பார்வதி… காட்டமான இன்ஸ்பெக்டர்..!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com