நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீங்களா என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை அளித்துள்ள பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக உள்ளனர். இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
சமையல் செய்பர்களுக்கு தங்களது கோமாளிகளுடன் சேர்ந்து செய்யும் கலாட்டாக்கள் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும். இதில் கோமாளிகயாக கலந்துகொண்டு கவனம் பெற்றவர் மணிமேகலை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்த மணிமேகலை 4-வது சீசன் தொடக்கத்திலேயே இனி இந்நிகழ்ச்சிக்கு வரப்போவதில்லை என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

இவர் வெளியேறியதற்கு காரணம் என்ன என்பது குறித்து பல தகவல்கள் இணையத்தில் பரவினாலும் தவிக்க முடியாத நில காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக மணிமேகலை தெரிவித்திருந்தார். இதனிடையே சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த மணிமேகலையிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள மணிமேகலை, இல்லை அது எல்லாமே வதந்தி. யூடியூப்பில் என்னை பற்றி செய்திகள் வந்து அது உங்களுக்கு தெரியுர மாதிரி இருக்காது எந்த சந்தோஷமான செய்தியாக இருந்தாலும், நானே தான் உங்களுக்கு சொல்வேன் என்று பதில் அளித்துள்ளார். மணிமேகலையின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“