தமிழ் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், இந்த சீசனில், பிரியங்கா – மணிமேகலை இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கவே பிடிக்கவில்லை என்று செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் கூறியுள்ளார்.
ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. காமெடி ஷோவான இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 5-வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த சீசனில், ரக்ஷனுடன், மணிமேகலை தொகுப்பாரளாக களமிறங்கினார். வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து தாமுவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வந்துள்ளார்.
அதேபோல் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கண்டஸ்ட்ண்டாக பங்கேற்றுள்ளார். அதே சமயம் இந்த நிகழ்ச்சி தொடங்கியதில், இருந்து பிரியங்கா தான் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பது போல் நடந்துகொள்வதாகவும், எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்றும் கூறிய மணிமேகலை கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், பிரியங்கா வந்ததில் இருந்து விஜய் டிவியில் இருந்து வெளியேறிய பெண் தொகுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, இவர்கள் வெளியில் சென்றதற்கு முக்கிய காரணம் பிரியங்காதான் என்றும் கூறி வருகின்றனர். சின்னத்திரையில் தற்போது பெரிய டாப்பிக்காக இது பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசியுள்ள செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், குக் வித் கோமாளி 4 சீசன்களையும் பார்த்திருக்கிறேன். பாபா, சங்கர், புகழை அடிப்பது தூக்கிக்கொண்டு ஓடுவது என அனைத்துமே காமெடியாக இருக்கும். ஆனால் இப்போது இர்பான் மற்றவர்களை அடிப்பதை பார்க்கும்போது எரிச்சலாக வருகிறது. அதற்கு காரணம் அவர் வந்தவுடன் பிரியங்காவை அக்கா என்று சொல்லி காக்கா பிடித்ததும, பிரியங்காவும் தம்பி என்று பாசமழை பொழிந்ததும், அவர் பாதுகாப்பான கண்டஸ்டண்டாக மாறிவிட்டார். இதேபோல் மணிமேகலையும் இல்லாததது தற்போது பிரியங்காவுக்கு பிரச்சனையாகிவிட்டது.
சமைக்கவே தெரியாத பிரியங்காவுக்கு எப்படி டைட்டில் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு டைட்டில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நிகழ்ச்சி நடத்தினார்களா என்று தெரியவில்லை. வாயப்பு கொடுத்தவர்களுக்கே திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுத்தால், அடுத்தவன் எப்படி பிழைப்பான். மணிமேகலை விஷயத்தில் சேனல் நிர்வாகம், நிகழ்ச்சி தயாரிப்பு என இருவர் மேலும் தவறு இருக்கிறது. இருவரையும் விசாரிக்காமல் இதற்குமேல் ஷோவை நடத்த முடியாது என்று மணிமேகலையை எப்படி மிரட்டலாம் என்று கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“