Advertisment

விலகிய வெங்கடேஷ் பட்... புதிய நடுவராக ஹிட் பட நடிகர் : குக் வித் கோமாளி சீசன் 5 புதிய அப்டேட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில், 5-வது சீசன் தொடங்க உள்ளது.

author-image
WebDesk
New Update
Cook With Comali

குக் வித் கோமாளி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குக் வித் கேமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார். வித்தியாசமான சமையல் போட்டியான இந்நிகழ்ச்சியில்செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாகவும்வி.ஜே.ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வநதார்.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இருவரும், நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும்மீண்டும் வேறொரு தளத்தில் புதிய நிகழ்ச்சியில் சந்திக்கலாம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்கில் செஃ.ப் தாமு அந்த பதிவை நீக்கிவிட்ட நிலையில், வெங்கடேஷ் பட் விலகினாலும், அவர் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசனில், வெங்கடேஷ் பட்க்கு பதிலாக புதிய நடுவராக யார் வருவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், குக்கு வித் கோமாளி சீசன் 5-ன் புதிய நடுவராக சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

இது குறித்து தமிழ் சீரியல் எக்ஸ்பிரஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விஜய் டிவியில் விரைவில் வரவிருக்கும் குக்  வித் கோமாளிசீசன் 5 இல் நடுவர்களாக சமையற்காரர் மாதம்பட்டி ரங்கராஜ்மற்றும் செஃப் தாமுஆகியோர் இணைகிறார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது. மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதம்பட்டி ரங்கராஜ். இவர் 2019 இல் மெஹந்தி சர்க்கஸ் மூலம் நடிகராக அறிமுகமானார், பின்னர் 2020 இல் பென்குயின் என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Cook With Comali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment