Cook With Comali Pavithra Lakshmi Say About Comali Pughal : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பவித்ர லட்சுமி கோமாளி புகழ் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது:
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருவது குக் வித் கோமாளி. வித்தியாசமாக சமையல் நிகழ்ச்சியான இதில் சமையல் கலைஞர்களாக நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் போட்டியிடும் நிலையில், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் காமெடியில் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் அஸ்வின் மற்றும் பவித்ரா எலிமினேஷன் போட்டியில் இருந்த நிலையில், பவித்ரா தோல்வியடைந்து வெளியேறினார். எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பவித்ராவிடம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து ரசிகர்கள் பலர் பல்லேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Pugazh mela Crush ❤❤❤ @itspavitralaksh @pugazh_iam #CookwithComali2 pic.twitter.com/34oe4FxSXB
— Memes Viluthugal (@memesviluthugal) March 16, 2021
இந்த கேள்விகள் அனைத்திற்கும் தற்போது பதில் அளித்து பவித்ராவிடம் ரசிகர்கள் பலரும், கோமாளி புகழ் மீது கிரஷ் இருக்கிறதா என்று கேட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள பவித்ரா “புகழ் மேல யாருக்கு தான் க்ரஷ் இல்ல? அவர் மாதிரி சிரிக்க வச்சுட்டே இருக்க ஒரு ஆள் மேல யாருக்கு தான் க்ரஷ் வராது?” என கூறி உள்ளார்.
இந்நிலையில், குக் வித் மோமாளி ஷோவில் இருந்து வெளியேறும் முன் பேசிய பவத்ரா, நான் அதிகம் பாப்புலர் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ் மூலமாக தான் கூறி இருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய புகழ், தன் வெற்றிக்கு அடுத்தவர் காரணம் என யாரும் சொல்ல மாட்டர்கள். அவர்கள் உதவினாலும் நான் உழைப்பை போட்டேன் என சொல்வார்கள்’ , ‘இது பெரிய விஷயம். என என்று எமோஷனலாக பேசியிருந்தது குறிப்பிடத்கதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”