விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு ஆளாக வெளியேறி வருவது, அடுத்த சீசன் நடைபெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார். வித்தியாசமான சமையல் போட்டியான இந்நிகழ்ச்சியில், செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாகவும், வி.ஜே.ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வநதார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் நடிகர் புகழ், சிவாங்கி, அஸ்வின், பாலா உள்ளிட்ட பலர் பிரபலமடைந்தனர். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 5-வது சீசன் தொடங்க இருந்தது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இருவரும், நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும், மீண்டும் வேறொரு தளத்தில் புதிய நிகழ்ச்சியில் சந்திக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.
இதனிடையே தற்போது இந்நிகழ்ச்சியை தாயரித்து வந்த மீடியா மாசன்ஸ் நிறுவனம், குக் வித் கோமாளி உட்பட தங்கள் தயாரித்து வந்த விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் தொலைக்காட்சியில் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து விஜய் டிவியில் மட்டுமே பணிபுரிந்தோம். இது எங்களுடைய இரண்டாவது வீடு. பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து, பல பிராண்டுகளுக்கு ஸ்கிரிப்ட் செய்து, சுமார் 1000க்கும் மேற்பட்ட எபிசோட்களை இயக்கிய பிறகு இப்போது ஸ்டார் விஜயிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த மே மாதம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து மட்டும் தான் நாங்கள் விலக வேண்டும் என்று நினைத்தோம்.
அப்போது எங்களுடைய மற்ற இரண்டு நிகழ்ச்சிகளான குக்கு வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொடர்வோம் என்று தான் நினைத்திருந்தோம். ஆனால் தற்போது எதிர்பாராத சூழ்நிலை காரணமாக இந்த இரண்டு நிகழ்ச்சிகளில் இருந்தும் நாங்கள் விலகுகிறோம் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி!' என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கி வந்த பார்த்திபன், தனது பதிவில், ‘’சில குட் பை ரொம்பவே கடினம்! நிறைய மகிழ்ச்சியான நினைவுகளுடன் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன். கடந்த நான்கு சீசன்களும் குடும்பமாக பயணித்த நினைவுகள் மறக்க முடியாதவை. உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆசீர்வாதத்திற்கும் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் என் நன்றிகள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
முதலில் நடுவர்கள் வெளியேறிய நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் இயக்குனர்கள் என அடுத்துடுத்து வெளியேறுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் டிவியில் குக் வித் கோமாளி வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே சமயம் பழைய கோமாளிகளாவது நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.