Cook With Comali Promo Update : விஜய் டிவியில் இளைஞர்களை கவர் செய்யும் அளவுக்கு பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ரசிகர்கள் மத்தியிலும் டிஆர்பி ரேட்டிங்கிலும முன்னணியில் இருந்து வருவது குக் வித் கோமாளி. இதவரை 2 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியில் தற்போது 3-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமையல் கலையுடன், காமெடியை இணைத்து வித்தியாசமான பாணியிர் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் சீரியஸாக சமையல் செய்யும்போது கோமாளிகள் வந்து சொதப்பி விடுவது செம காமெடியாக இருக்கும். இதில் சில சமயங்களில் நன்றாக இருக்கும் சமையல் கூட கோமாளிகளால் சிதைந்துபோகும் நிலையும் உருவாககும்.
Yen vj televi..epare patta scene adhu..
— DEEPAK (@Murugesh771) March 10, 2022
Ipdi nasam pandriye 😭😭😭👎👎😭👎😭 pic.twitter.com/EBkqJNrfuu
இந்த இன்னல்களையெல்லாம் தாண்டி குக்குகள் சமையலில் அசத்தி அடுத்த ரவுண்டுக் சலைக்ட் ஆகி வருகின்றனர். இதில் கடந்த 2 சீசன்களில் நடுவர்களாக பங்கேற்ற செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் 3-வது சீசனிலும் நடுவர்களாக பங்கேற்றுள்ள நிலையில், ரக்ஷன் தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து வருகிறார். இதில் குக்குகளாக அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ஸ்ருதிகா, அபிராகுல், ரோஷ்னி ஹரிப்பிரியன், வித்யூலேகா, தர்ஷன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த படம் பார்த்து தியேட்டர் விட்டு ரசிகர்களும் இப்படி தான் வண்டியை எடுத்து வேகமாக வீட்டிற்கு போனார்கள்!!!! pic.twitter.com/7VfTbryZmb
— 🕊️🆅🅸🅹🅴🆂🅷🕊️ (@Vijesh145) March 10, 2022
அதேபோல் கோமாளிகளாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, குரோஷி, மூக்குத்தி முருகன், பரத், புகழ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கோமாளிகளாக இவர்கள் குக்குகளுக்கு செய்யும் தொல்லைகள் மற்றும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில், ஹே சினாமிகா படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் துல்கர் சல்மான் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இது தொடர்பான ப்ரமோ வெளியான நிலையில், இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் செம்ம கடுப்பாகியுள்ளனர்.
Etha ethoda compara panra..
— Jaz.Shining (@JazShining) March 10, 2022
Serupp pinjirum🤢🤮
Cringaangi @sivaangi_k😪#sivaangi #ashaangi 🤡🤢 https://t.co/i2sO3K04Lg pic.twitter.com/ztEjMGFxfB
துல்கர் சல்மான் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில், நித்யா மேனன் துல்கர் சல்மான இடையேயான ரிலேஷன்ஷிப் பெரிய ஹிட்டடித்தது. தற்போது இந்த படத்தை இமிடேட் செய்யும் வகையில், விஜய் டிவி ஷிவாங்கியை நித்யா மேனன் போல் பில்டப் கொடுக்க, துல்கர் சல்மானும் ஷிவாங்கியை நித்யா மேனன் என்று நினைத்து அவருடன் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மணிரத்னம் படத்தை கெடுக்க வேண்டாம் என்று ஷிவாங்கியை வெளுத்து கட்டி வருகின்றனர். இதனால் ட்விட்டர் பக்கம் பரபரப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “