விஜய் டிவி விருது வென்ற நடிகர் புகழ், வடிவேல் பாலாஜி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்குமான பதிவை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு ஒளிபரப்பாகன இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பான நிலையில், கடந்த தமிழ்புத்தாண்டு அன்று (ஏப்ரல் 14) இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இரண்டாது சீசனுக்கு ரசிகர்கள் ஆதரவு உச்சம் தொட்டது. இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் கனி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நிலையில், பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில்,குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்று திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்றவர் புகழ். தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்து வரும் நிலையில், நேற்று ஒளிபரப்பப்பட்ட விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில், புகழுக்கு டே காமெடியனாக விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் தான் இப்போது ஆறு படங்களில் நடித்து வருவதாகவும், ஆனால் அதன் விவரங்களை வெளியிட முடியாது என்றும் கூறி உள்ளார்.
அவருடன் மேடையில் பாலா, சரத் உள்ளிட்டவர்களும் இருந்தனர். அப்போது பேசிய பாலா, 'சிங்கப்பூரில் ஒரு கடையில், ஏப்ரல் 14ம் தேதி ஆஃபர் போட்டிருக்கிறார்கள், அங்கு சென்று ஒரு செல்போன் லான்ச் செய்யவேண்டும் என சொன்னார்கள். அதற்காக ஒரு சிறிய தொகை தருவதாக கூறி டிக்கெட் போட்டு கொடுத்தார்கள். அங்கு சென்று போட்டோ எடுத்துவிட்டுத் கிளம்புகிறோம் என சொன்னால், 'எங்க போறீங்க. இங்க வந்து நில்லுங்க' என சொல்லி எங்களை வெளியில் நிற்கவைத்து விட்டார்கள். அதன்பிறகு 'விஜய் டிவி நடிகர்கள் வந்திருக்கிறார்கள் என சொல்லி எங்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்" என சொன்னார்.
அடுத்து பேசிய நடிகர் புகழ், நான் பெண் வாய்ஸில் பேசி போன் விற்றுக்கொண்டிருந்ததாக கூறி , அங்கு பேசியது போல மேடையில் பேசி காட்டினார். அதன் பின் அவருக்கு மேடையில் விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மேடையில் பேசிய கிரேஸ் புகழ் இந்த அளவு புகழ் பெறவேண்டும் என அதிகம் ஆசைப்பட்டது வடிவேல் பாலாஜி அண்ணன் தான். கலக்கப்போலது யாரு சாம்பியன்ஸ் 2ல் தான் புகழ் வந்தார். அப்போது நடிப்பதற்கு முன்பே வடிவேல் பாலாஜி வந்து 'புகழ் கண்டிப்பா நல்லா பண்ணுவான், அவனை பற்றியும் ஏதாவது கமெண்ட்ஸில் சொல்லுங்கள்.. மறந்துடாதீங்க' என சொல்வார்.
தற்போது புகழ் புகழின் உச்சியில் இருக்கும்போது அவர் இல்லாததை நான் மிஸ் செய்கிறேன். வடிவேலுக்கு இணையாக புகழை பேசுகிறார்கள். இது மிகப்பெரிய விஷயம் எனவும் அவர் தெரிவித்தார். வடிவேல் பாலாஜி பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகழ், அவர். "அவார்டு வாங்குறப்ப நீ இல்லனு கஷ்ட பட்டேன் மாமா. ஆனா நீ என்கூடத்தான் இருக்குறனு நினைக்குறப்ப சந்தோசமா இருக்கு. எப்பவும் என் தோளை தட்டிகொடுத்துட்டு இரு மாமா. லவ் யூ மாமா. இது ஓவியம் இல்லை உணர்வு. நன்றி மதுரை மக்களே" என குறிப்பிட்டுள்ளார்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil