திறப்பு விழா முடிந்த உடனேயே கடைக்கு சீல்: புகழ் ரசிகர்களால் வந்த வினை

Tamil Reality Show : கடை திறப்பு விழாவிற்கு வந்த புகழுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றதால், போலீஸார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

Cook With Comali Pughal : ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ் திருநெல்வேலி அருகே செல்போன் கடை ஒன்றின் திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக சென்றபோது அவரைப் பார்க்கக் கூட்டம் கூடியதால் கடைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தனது அசத்தலான காமெடி மூலம் குக் வித் கோமாளி ரசிகர்கள் மட்டுமல்லாது மக்களிடமும் பெரும் பிரபலமானவர் புகழ்.

ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வரும் இவர் தற்போது ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், திருநெல்வேலி அருகே வண்ணார்பேட்டையில் பிரபல திருநெல்வேலி செல்போன் கடையின் புதிய கிளையைத் திறந்து வைக்க புகழுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், இன்று கடையைத் திறந்துவைக்க வண்ணார்பேட்டை  சென்றுள்ளார். அப்போது இவர் வந்திருக்கும் தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், அவரைப் பார்க்க வண்ணார்பேட்டை பகுதியில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அதேபோல அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் முயன்றனர். அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில், கொரோனா தடுப்பு புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கூட்டம் கூட்டியதாகக் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர். புதிய கிளையின் திறப்பு விழா அன்றே கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த நிகழ்வு, கடையின் உரிமையாளர்கள் மட்டுமல்லாது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality show cook with comali pugal store opening crowd

Next Story
சிவாங்கியின் ஃபேன் இனியா… ரெண்டு பேரையும் ஒப்பிடுறது நியாயமே இல்லை! சொல்றது யாரு?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com