Cook With Comali Pugazhi Controversy Video : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் பேசிய சர்ச்சை வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். அதிலும் காமெடி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில், வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் சமையல் கலைஞர்களாக இருக்கும் நிலையில், புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கோமாளிகளாக கலக்கி வருகின்றனர்.
முதல் சீசனை விட பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சி, முதல் சீசனில் இல்லாத பல புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை போல பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ள இந்த நிகழ்ச்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் கன்ஃப்யூஷன் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு செல்லும் கோமாளிகள் குறிப்புகளை எடுத்து வந்து குக்குகளுக்கு சொல்ல வேண்டும்.
They are using it realising it has thus homophobic origin. The CWC team has made sure it is used in the script. It was not even in the non scripted area. 😏 Cook with Comali has a huge problem and now the entire team has used this slur against a comment they made in script..! https://t.co/Sjptj3xaTk
— 🌈🌻 Alyosha (@homoduos) March 14, 2021
இதில் கன்பெஃஷன் அறைக்கு சென்ற கோமாளி புகழ் பிக்பாஸ் ஸ்டைலில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். ஆண்களுக்கே உங்களை காதலிக்க தோன்றும் என்று குரல் ஒலித்தது. இந்த வசனத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, ஒளிபரப்பாகும் போது அந்த வசனம் நீக்கப்பட்டது. ஆனால் ஹாட்ஸ்டாரில் அந்த வசனம் நீக்கப்படவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.