குக் வித் கோமாளி சீசன் 5... கோமாளியாக களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை? ப்ரமோ வைரல்

குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் கோமாளியாக சீரியல் நடிகை பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் கோமாளியாக சீரியல் நடிகை பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Cook With Comali Seson 5

குக் வித் கோமாளி சீசன் 6

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குக் வித் கோமாளி நிகழ்ச்சின் 5-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று ப்ரமோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. பிரபல செஃப் வெங்கடேஷ் பட், தாமு ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியை வி.ஜே.ரக்ஷன் தொகுதி வழங்கி வந்தார். குக்குகள் சமைப்பதும், அவர்களுக்கு உதவி செய்வது போல் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாகும்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம், சிவாங்கி, புகழ், பாலா, அஸ்வின் உள்ளிட்ட பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் திடீரென விலகிய நிலையில், நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனமும் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

Advertisment
Advertisements

இதன் காரணமாக 5-வது சீசன் நடைபெறுமா? அப்படி நடந்தால் யார் நடுவராக இருப்பார்? எந்த நிறுவனம் தயாரிக்கும் என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது 5-வது சீசனுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜன் களமிறங்கியுள்ளார். குக் வித் கோமாளியின் 5-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Cook With Comali Shabi

இதனிடையே இந்நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் பற்கேற்பது உறுதியாகியுள்ளது. தெய்வமகள் சீரியலில் தாரணி என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஷபி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கேமாளியாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 1 சீரியலில் நடித்திருந்த நடிகை ஷபி, அடுத்து பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலில் நடித்த இவர், தற்போது ஜீ தமிழின் மாரி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவர் நடித்தது அனைத்துமே பாசிட்டீவ் கேரக்டராக இருந்தாலும், இவரின் குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Cook With Comali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: