கண்ணீரில் மிதந்த குக் வித் கோமாளி: காமெடி நிகழ்ச்சியில் சீரியஸ் ஏன்?

காமெடிக்கு பெயர் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது எமோஷ்னலில் உச்சமாக மாறியுள்ளது.

காமெடிக்கு பெயர் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது எமோஷ்னலில் உச்சமாக மாறியுள்ளது.

author-image
WebDesk
New Update
Cook With Comali

குக் வித் கோமாளி சீசன் 5

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காமெடி கலக்கலுடன் கூடிய நிகழ்ச்சி என்று பெயர் பெற்றிருந்த விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது போட்டியாளர்களின் ஆனந்த கண்ணீருடன் எமோஷ்னவல் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார். வித்தியாசமான சமையல் போட்டியான இந்நிகழ்ச்சியில்செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாகவும்வி.ஜே.ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வநதார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் நடிகர் புகழ், சிவாங்கி, அஸ்வின், பாலா உள்ளிட்ட பலர் பிரபலமடைந்தனர். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்கியது. இதில் வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக வந்துள்ளார். மேலும் விஜய் டிவியின் பிரியங்கா, யூடியூபர் இர்பான், நடிகர் விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் குக்குகுகளாக பங்கேற்றுள்ளனர்.

காமெடியும் சமையலுமாக சென்றுகொண்டிருந்த இந்நிகழ்ச்சி தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இந்நிகழ்ச்சியில், இந்த வாரம் மறக்குமா நெஞ்சம் என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில், நாம் மறக்கப்பட்ட உணவுகளை சமைத்து போட்டியாளர்கள் அதை தங்களது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது தான் டாஸ்க். இதற்காக போட்டியாளர்களின் குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

Advertisment
Advertisements

சமைத்து முடித்தவுடன் அனைவரும் சாப்பிடும்போது ஆனந்த கண்ணீரில் இருக்கின்றனர். இந்த சீன் தொடர்பான ப்ரமோ தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது. நமது பாரம்பரிய உணவுகள் பலவற்றை நாம் மறந்துவிட்ட நிலையில், இந்நிகழ்ச்சியின் மூலம் அதில் சிலவற்றை நாம் தெரிந்துகொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cooku With Komali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: