scorecardresearch

கோமாளிகள் குக் செய்த அதே செட்: ‘தீபா அக்காவ இங்கேயும் சமைக்க விட்டுட்டீங்களேடா!’

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை தீபா தற்போது மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

கோமாளிகள் குக் செய்த அதே செட்: ‘தீபா அக்காவ இங்கேயும் சமைக்க விட்டுட்டீங்களேடா!’

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. சமையல் கலையும் நகைச்சுவை கலையை அள்ளி தெளித்துக்கொண்டிருந்த இந்த ஷொ சமீபத்தில் நிறைவு பெற்றது. இதில் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அஸ்வின், மற்றும் ஷகீலா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் பரிசுகளை சென்று அசத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று கடந்த தமிழ் புத்தாண்டு அன்று (ஏப்ரல் 14) ஒளிபரப்பானது.  இந்த இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர் சந்தொஷ் நாராயணன், நடிகர் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.  கிட்டதட்ட இரண்டு வாரஙகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் மனிதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

தினமும் சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்களுக்கு  அதிக மகிழ்ச்சியை கொடுத்த இந்த நிகழச்சியை முடிக்க வேண்டாம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில், தற்போது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர்.  

இந்த ஷோவில் தனது கவருடன் கலந்துகொண்ட குணச்சித்திர நடிகையும் குக் வித் கொமாளி போட்டியாளருமான தீபா தனது வழக்கமான பேச்சியில் ரசிகர்கள் மட்டுமல்லாது சக போட்டியாளர்களையும் குஷிப்படுத்தி வருகிறார். தற்போது குக் வித் கோமாளி செட்டில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் சமைக்கும் போட்டி நடைபெறுகிறது. இதில் கணவன்மார்கள் சமைக்க வேண்டும் மனைவிமார்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

ஆனால் அக்கா தீபாவின் கணவரோ தான் வீட்டில் தினமும் சமைப்பதாகவும், இங்கே தனது மனைவி சமைக்கவேண்டும் என்று கூறுகிறார். இது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் செய்த அக்கா தீபாவை இங்கேயும் சமைக்க வைத்தவிட்டீர்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு இந்த டாஸ்க் குக் வித் கோமாளி நிழ்ச்சியை ஞாபகப்படத்துவது மறுப்பதற்கில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil reality show cook with comali set mr and mrs chinnaththirai