Tamil Reality Show Cook With Comali Thangadurai Viral Joke : ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் டைகர் தங்கதுரை தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமையலுடன் கலக்கல் காமெடி நிறைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி கோமாளிகள் செய்யும் அட்ராசிட்டிகள் கூடாரமாக உள்ளது என்றே கூறலாம். வார இறுதிநாட்களில் வரும் இந்த நிகழ்ச்சிக்காக வாரம் முழுவதும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகும் பதிவுகளும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.
வாரந்தோறும் வித்தியாசமான கெட்டப்களில் வந்து கலக்கும் கோமாளிகள் இந்த நிகழ்ச்சியில் பெரும் ஹைலைட்டாக இருக்கும் நிலையில், டைகர் தங்கதுரை சொல்லும் மொக்க ஜோக்குக்கு நிகழ்ச்சியில் இருக்கும் மற்ற பிரபலங்களே டென்சன் ஆவார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர், தனது பணியை செவ்வனே செய்துவருகிறார். இதெல்லாம் பத்தாது என்று அவர் தனியாக சமூக வலைத்தளங்களில் அவர் காமெடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், ஷிவாங்கி மேக்கப் போட்டுக்கொண்டிருக்கும் போது அவரிடம் ஒரு காமெடியை கூறுகிறார். ஐலைனர் மற்றும் லிப்ஸ்டிக்கிற்கு இடையே போட்டி வைத்தால் எது ஜெயிக்கும் என அவர் கேட்க, அதற்கு ஐலைனர் தான் என ஷிவாங்கி சொல்கிறார். ஆனால் லிஸ்டிக் தான் ஜெயிக்கும் என தங்கதுரை சொல்கிறார். அதற்கு சிவாங்கி எப்படி என்று கேட்க ‘வாய்மையே வெல்லும்.. அதனால் தான்’ என விளக்கம் வேறு கொடுக்கிறார். இதனால் டென்ஷன் ஆன ஷிவாங்கி கத்துகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil