Advertisment

புகழின் உச்சியில் கனி: 10 ஆண்டுக்கு முன்பே விஜே-ஆக இருந்தது தெரியுமா?

தற்போது ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும் கனி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

author-image
WebDesk
Apr 15, 2021 19:38 IST
புகழின் உச்சியில் கனி: 10 ஆண்டுக்கு முன்பே விஜே-ஆக இருந்தது தெரியுமா?

குக் வித் கோமாளி சீசன் 2-ல் சாம்பியன் பட்டம் வென்ற கார்த்திகா (எ) கனிக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Advertisment

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அதிலும் விஜய் டிவி ஷோக்களுக்கு சொல்லவே வேண்டாம். இதில் வரும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது என்றால் மிக்கையாகாது. அந்த வகையில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு முதன் முதலாக தொடங்கப்பட்ட இந்த ஷோ பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ரியாலிட்டி ஷோ இந்த அளவுக்கு பிரபலமாவதற்கு முக்கிய காரணமே இதில் வரும் கோமாளிகள் தான்.

தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் இந்த நிகழ்ச்சியின் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வந்தது. அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவத்ரா லட்சுமி என பல பிரபலங்கள் கலநதுகொண்ட நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஒளிபரப்பாகிய இந்த சீசனின் இறுதிச்சுற்றில், அதிக புள்ளிகள் பெற்ற கனி (எ) கார்த்திகா சாம்பியன் பட்டம் பெற்கு பரிசுத்தொகையை வென்றார். இவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் இயக்குநர் அகத்தியன் மூத்த மகள், தீராத விளையாட்டுபிள்ளை, சமர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் திருவின் மனைவி, சென்னை 28, அஞ்சாதே ஆகிய படங்களின் நாயகி விஜயலட்சுமியின் சகோதரி என்ற மிகப்பெரிய சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் கார்த்திகா (கனி).

இவரின் மற்றொரு தங்கையான நிரஞ்சனி, சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையாடித்தால் படத்தை இயக்கிய, இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை மணந்துகொண்டார். மேலும் அதே படத்தில் இரண்டாம் நாயகனாக நடித்த ரக்ஷனுக்கு ஜோடியாக நடித்தவர். அதே போல தற்போது ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும் கனி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல் விளையாட்டு ‘ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cook With Comali Kani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment