scorecardresearch

‘புடிச்சிருக்கா… உடனே தாலி கட்டுங்க!’ டி.ஜே பிளாக்-ரோஜாஸ்ரீ இடையே ஜி.பி முத்து பஞ்சாயத்து

விஜய் டிவியின் ஹம் சொல்றீயா ஷூம் சொல்றீயா நிகழ்ச்சியின் மூலம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருபவர் ரோஜாஸ்ரீ

‘புடிச்சிருக்கா… உடனே தாலி கட்டுங்க!’ டி.ஜே பிளாக்-ரோஜாஸ்ரீ இடையே ஜி.பி முத்து பஞ்சாயத்து

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் டிஜே பிளாக் – ரோஜாஸ்ரீ இருவரும் பிடித்திருந்தால் உடனே தாலி கட்டு என்று டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பஞ்சாயத்து செய்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.   

புதிய நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதில் விஜய் டிவிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொடங்கி, ஸ்டார்ட் மியூசிக் வரை பல நிகழ்ச்சிகளை ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. வாரம் முழுவதும் சீரியல் வர இறுதியில் ரியாலிட்டி ஷோக்கள் என டிஆர்பி ரேட்டிங்கை உச்சத்தில் கொண்டு செல்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ஹம் சொல்றீயா ஷூம் சொல்றீயா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்நிகழ்ச்சியின் மூலம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருபவர் ரோஜாஸ்ரீ. திருச்சியை சேர்ந்த இவர், இந்நிகழ்ச்சியில் டிஜே பிளாக்குடன் இணைந்து செய்த ஃபர்பாமன்ஸ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இதனிடையே ஹம் சொல்றீயா ஹூம் செல்றீயா என்ற நிகழ்ச்சியின் சமீபத்திய ப்ரமோ வைரலாகி வருகிறது. இதில் டி.ஜே. பிளாக் ரோஜா ஸ்ரீ இருவருக்கும் இடையே ஜி.பி.முத்து பஞ்சாயத்து செய்கிறார். ரோஜா ஸ்ரீ பிளாக்குடன் காதல் வலை வீசினாலும், பிளாக் சிஸ்டர் என்று சொல்லி விடுகிறார். முதலில் ரோஜாஸ்ரீக்கு ஆதரவாக பேசும் ஜி.பி.முத்து, அவர் டி.ஜே.பிளாக்கை டேட்டிங்கிற்கு அழைத்த விஷயம் தெரிந்து ஷாக் ஆகிறார்.

டேட்டிங் எல்லாம் கிடையாது பிடிச்சா தாலிகட்டு என்று இருவருக்கும் பஞ்சாயத்து செய்கிறார். ஆனாலும் இறுதியில் டி.ஜே பிளாக் ரோஜாஸ்ரீயை சிஸ்டர் என்று சொல்லிவிட்டு சென்றுவிட, ரோஜா ஸ்ரீ ஏமாற்றத்துடன் சென்றுவிடுகிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil reality show gp muthu in vijay tv show dj black and rojasri