முன்னாள் கணவர் மரணம்: பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத நடிகை

Biggboss Contestant Ex Husband Death : முன்னாள் கணவர் இறந்த செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டில் நடிகை கதறி அழுத சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tamil Reality Show Update Malayalam Bigboss : பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகையின் முன்னாள் கணவர் இறந்த செய்தி கேட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகை கதறி அழுத்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பாலிவுட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 4-வது சீசனை எட்டியுள்ளது. இதில்  தமிழில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடத்தில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.  இதில் அந்தந்த மொழிகளில் முன்னணி நடிகர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மலையாளத்தில் முன்னணி நடிகர் மோகன்லால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் 4-வது சீசனில் மலையாள திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் பங்கேற்று வருகின்றனர். இதில், பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட்டும், குணச்சித்திர நடிகையுமான பாக்கியலட்சுமி என்பவர் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். தனது சிறுவயதில் இருந்தே டப்பிங் ஆர்டிஸ்டாக திரையுலகில் கால்வைத்த இவர், தற்போதுவை முன்னணி நடிகைகள் பலருக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இதற்காக பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தவர்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வரும் இவரை திடீர் என கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து அவரது முன்னாள் கணவர் இறந்து விட்டதாக பிக்பாஸ் குரலில்ல தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கிலட்சுமி, அழுது கொண்டே வெளியே வந்த நிலையில்,  சக போட்டியாளர்கள் என்ன நடந்தது என விசாரித்த போது, அவர் கணவர் இறந்துவிட்டதை கூறி அழுதுள்ளார். இதனால் சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இதனையடுத்து பிக்பாஸ் சிறப்பு அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, அவர் தனது மகன்களிடம் பேசியுள்ளார்.

மேலும் அவரது முன்னாள் கணவருக்கு நீண்ட காலமாகவே சிறுநீரக இருந்த்தாகலும், தான் ஒரு சிறுநீரகத்தை கொடுப்பதாக கூறியும் அவர் ஈகோ காரணமாக வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்து கதறி அழுத நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality show malayalam biggboss contestant bhagalakshmi ex husband death

Next Story
நஸ்ரியா, ஜனனி அய்யர், ஆல்யா மானசா… ‘என்ஜாய் எஞ்சாமி’ யாரு டான்ஸ் பெஸ்ட்?Entertainment news in tamil cinema celebrities dancing for enjoy enjaami song tamil video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express