scorecardresearch

காமெடி என்ற பெயரில் இப்படி செய்யலாமா? உருவ கேலியில் சிக்கிய மணிமேகலை!

Tamil Reatlity Show : விஜய் டிவியின் மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோவில் உருவகேலி தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காமெடி என்ற பெயரில் இப்படி செய்யலாமா? உருவ கேலியில் சிக்கிய மணிமேகலை!

Vijay Tv Mr & Mrs Chinnathirai Promo Viral : விஜய் டிவியில் பெண்களின் உருவம் குறித்து காமெடி என்ற கேலி கிண்டல் செய்வது தொடர்ந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள விஜய் டிவியின் மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் ப்ரமோ வீடியோவில் உருவகேலி தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்றது விஜய்டிவி. கடந்த சில ஆண்டுகளாக டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற சேனல்களை பின்னுக்கு தள்ளி வரும் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு இருந்து வருகிறது.  அதிலும் பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் முடிந்த பின்னும் ரசிகர்கள் மத்தியில’ ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்ல்லாம்.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று மிஸ்டர் அன்ட் மிஸ்ஸ் சின்னத்திரை. சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். ம.க.பா.ஆனந்த் மற்றும் அர்ச்சானா தொகுத்து வழங்கி இந்நிகழ்ச்சியில் தற்போது புதிய தொகுப்பாளினியாக மணிமேகலை இணைந்துள்ளார். அர்ச்சனாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மணிமேகலைக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.  

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்க்களில் பங்கேற்பவர்கள் காமெடி என்ற பெயரில் பெண் தொகுப்பாளினிகள் மற்றும் பெண் போட்டியாளர்களை அவர்களின் உருவத்தை வைத்து கேலி செய்யும் நிகழ்வு சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே விஜய் டிவியின் பிரியங்கா, கிரேஸ் போன்ற பல்வேறு தொகுப்பாளர்களை விஜய் டிவியை சேர்ந்தவர்களே பலமுறை நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலி செய்திருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு நடிகை தீபா அவரது உருவம் குறித்து கேலி கிண்டலுக்கு ஆளானார். அதை எதிர்த்து அவர் பேசிய விதம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஆனால் கடைசியில் இவர் எல்லாம் பிராக் என்று கூறியது ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது.

இந்நிலையில, தற்போது மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக உள்ள மணிமேகலையை பிரபல சின்னத்திரை நடிகர் யோகேஷ்ஷின் (மைனா நந்தினி கணவர்) அம்மா, உருவக் கேலி செய்தது தொடர்பான ப்ரமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உருவக் கேலிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil reality show mr and mrs chinnaththarai promo video viral

Best of Express