'நீயா நானா' கோபிநாத் திடீர் வெளிநடப்பு: விஜய் டி.வி ஷோவில் நடந்தது என்ன?
Tamil Reality Show : நீயா நானா நிகழ்ச்சியில், இந்த வாரம், வயதானாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கணவர்கள், இது தேவையில்லாத ஒன்று என்று எதிர்க்கும் மனைவிகள் பங்கேற்று வருகின்றன.
Tamil Reality Show : நீயா நானா நிகழ்ச்சியில், இந்த வாரம், வயதானாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கணவர்கள், இது தேவையில்லாத ஒன்று என்று எதிர்க்கும் மனைவிகள் பங்கேற்று வருகின்றன.
Vijay TV Neeya Naana Gopinath Promo Update : விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர் கோபிநாத் வெளியே செல்வது போல் வெளியாகியுள்ள ப்ரமோ பரபரப்பை ஏற்பத்தியயுள்ளது.
Advertisment
விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளவர் கோபிநாத். விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் இவர், வாரந்தோறும் ஒளிபரப்பாகி வரும் நீயா நான நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.
இதனால் மக்கள் மத்தியில் நீயா நானா கோபிநாத் என்று பிரபலாகியுள்ள இவர், தற்போது அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவது போன்று ப்ரமோ வெளியிட்ப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில்,ஏன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீயா நானா நிகழ்ச்சியில், இந்த வாரம், வயதானாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கணவர்கள், இது தேவையில்லாத ஒன்று என்று எதிர்க்கும் மனைவிகள் பங்கேற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சி தொடர்பான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இதில் ஒருவர் தான் மிஸ்டர் தமிழ்நாடு போட்டிக்கு தயாராகி வருவதாக கூறி தனது உடலமைப்பை காட்டுகிறார். அதன்பிறகு ப்ரமோவின் இறுதியில் நான் நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்கிறேன் என்று கூறி கோபிநாத் சென்றுவிடுகிறார். இவர் வெளியேறியதற்காக காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்த ப்ராமோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், கோபிநாத் வெளியேறியது ஏன் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“