scorecardresearch

‘எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட அந்த வார்த்தையை கேட்ப?’ நீயா- நானா கோபிநாத்தை மிரள வைத்த சீரியல் நடிகை

விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லக்கூடிய ஷோக்களில் முக்கியமானது நீயா நானா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத்

‘எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட அந்த வார்த்தையை கேட்ப?’ நீயா- நானா கோபிநாத்தை மிரள வைத்த சீரியல் நடிகை

விஜய் டிவி பிரபலமான நீயா நானா கோபிநாத்தை சீரியல் நடிகை ஒருவர் என்ன தைரியம் இருந்தால் என்னிட்ம் இந்த வார்த்தையை கேட்பீர்கள் என்று கேட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் பெற்ற தமிழ் சேனல் விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய்டியின் அடையாளம் என்று சொல்லக்கூடிய ஷோக்களில் முக்கியமானது நீயா நானா.

சமூகத்தில் நடக்கும் பல சம்பவங்களை ஒரு கான்சப்டாக எடுத்துக்கொண்டு அதற்கு ஆதரவு தருபவர்களும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் இரு குழுக்களாக விவாதிக்கும் இந்நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை அளவில் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் பிரபலமானவர் தொகுப்பாளர் கோபிநாத்.

நீயா நானா கோபிநாத் என்று அழைக்கப்படும் இவர் நிகழ்ச்சியில் பலமுறை சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை அசால்டாக சொல்லி பாராட்டுக்களை பெற்று வருவார். அதே சமயம் சில சமயங்களில் இவரின் ஆக்ஷன் ட்ரோல் செய்யும் அளவுக்கு மாறிவிடும். அந்த வகையில் தற்போது ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்நிகழ்ச்சியில், 90-ஸ் கிட்ஸ் சீரியல் நடிகைகளும், 2கே கிட்ஸ் சீரியல் நடிகைகளும் பங்கேற்றனர். இதில் இரு தரப்பினரும் நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் தங்களது நடிப்பு திறமை குறித்து பேசிக்கொண்டிருந்தனர். இதில் ஒரு நடிகை ஏ கோபிநாத் எவ்ளோ திமிர் இருந்தால் என்கிட்ட அந்த வார்த்தை கேட்ப என்று கேட்டது அரங்கத்தையே அதிர வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

நடிகையின் இந்த வார்த்தையை கேட்ட கோபிநாத் மற்றும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், நடிகைகயின் மிரட்டும் தோணியை பார்த்து கோபிநாத் தனது கண்களால் கொடுத்த ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோபிநாத் என்று பேசி அதிர வைத்த அந்த நடிகை விஜய் டிவியின் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil reality show neeya naana serial actress talk to gopinath viral