/tamil-ie/media/media_files/uploads/2021/04/samantha.jpg)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பவித்ரா லட்சுமியின் போட்டோஷூட்க்கு நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கு ரசிகர் பட்டாளங்கள் ஏராளம். மேலும் இதில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில், இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் பவித்ரா லட்சுமி.
இந்த நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்துள்ள இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் வைரலானது. அநத புகைப்படத்தில், தெறி பட சமந்தா அணிந்திருந்த அதே சேலையை அணிந்து போஸ் கொடுத்திருந்ததார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/saman.jpg)
இந்நிலையில் தற்போது அந்த போட்டோவை பார்த்துவிட்டு சமந்தா 'You look Beautiful' என ட்விட்டரில் பதில் அளித்து உள்ளார். சமந்தாவின் ட்விட்டர் பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பவித்ரா 'இல்லை மேடம், உங்களுக்கு ஒரு சதவீதம் கூட நான் இல்லை' என தெரிவித்து உள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.