ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்தி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தமாக 23 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். தற்போது ஃப்ரீ ஸ்டைல் ரவுண்ட் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் நடுவர்கள் முன்னிலையில் சரிகமப குழு போட்டியாளர்களில் ஒருவரான மணிகண்டனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

அதாவது அவரது பெயரில் (JSM HITS ) ஒரு ஆல்பமை வெளியிட்டுள்ளனர். காடுகளில் தனியாக பாடி பயிற்சி பெற்ற மணிகண்டன் JSM Hits என தனது பெயரில் ஆல்பம் வெளியாக வேண்டும். அது தான் தனது ஆசை என குறிப்பிட்டு இருந்தார். அதன் காரணமாக சரிகமப குழு அவருக்கு இப்படியொரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த சரிகமப மேடையில் இன்னொரு அழகிய தருணமும் அரங்கேறி உள்ளது. அதாவது, இன்னொரு போட்டியாளரான புருஷோத்தமன் சகோதரர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர இருவரும் இணைந்து அழகிய பாடலை பாடி அரங்கத்தை நெகிழ வைத்துள்ளனர்.

பல உணர்வுபூர்வமான தருணங்களுடன் ஒளிபரப்பாக உள்ள சரிகமப நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/