New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Start-Music.jpg)
ஸ்டார்ட் மியூசிக் ப்ரமோ
இந்த வாரம், ஆஹா கல்யாணம் சீரியல் நாயகர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
ஸ்டார்ட் மியூசிக் ப்ரமோ
ஸ்டார்ட் மியூசிங் நிகழ்ச்சியில் விஜே பிரியங்காவின் புது டாஸ்க்குகாக நடிகர் ஒருவர் தலைகீழாக நடந்து வந்த ப்ரமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரியாலி்ட்டி ஷோக்கள் நடத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிங் நிகழ்ச்சி பெரும் பிரபலம். இதுவரை 3 சீசன்கள் நடந்துள்ள நிலையில், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 சமீபத்தில் தொடங்கப்பட்டது. விஜே பிரியங்கா தேஷ்பாண்டே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
வாரா வாராம் புது புது டாஸ்களுடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் இந்த வாரம், ஆஹா கல்யாணம் சீரியல் நாயகர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியான முதல் ப்ரமோவில், டிஜே பிளாக்குக்கு திருமணம் என்பது போல் கட்டப்பட்டது. ஆனால் அதன்பிறகு யாருக்கு எந்த ஜோடிக்கு திருமணம் என்பதை பார்க்க வெயிட் பண்ணுங்க என்று பிரியங்கா சொல்லியிருந்தார்.
இதனிடையே தற்போது சீரியல் ஜோடிகளுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது தொகுப்பாளர் பிரியங்கா பொண்ணு வேண்டும் என்றால் தலைகீழாக நடந்து வர வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, அந்த சீரியலின் நடிகர் ஒருவர் சொன்னபடியே தலைகீழாக நடந்து வந்து நடிகையை தூக்கியுள்ளார்.
இது தொடர்பான ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், நடிகர் நடிகையை தூக்கும்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே ஷாக்ககியுள்ளனர். இந்த டாஸ்கை கொடுத்த பிரியங்கா தேஷ்பாண்டே வாயை பிளந்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார். இது குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.