மாரிமுத்து உட்பட 3 பேர் மரணம்; விஜய் டி.வி-யின் பிரபல நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு மோசமான சென்டிமென்டா?

சன் டிவியின் மொத்த டிஆர்பிக்குக் காரணமான எதிர்நீச்சல் மாரிமுத்துவை எப்படியாவது விஜய் டிவி சீரியலில் நடிக்க வைக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கடுமையாக முயற்சித்தது

சன் டிவியின் மொத்த டிஆர்பிக்குக் காரணமான எதிர்நீச்சல் மாரிமுத்துவை எப்படியாவது விஜய் டிவி சீரியலில் நடிக்க வைக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கடுமையாக முயற்சித்தது

author-image
WebDesk
New Update
Maarimuthu

எதிர்நீச்சல் மாரிமுத்து

திரையுலக பிரபலங்களின் திடீர் மரணம் பொதுமக்களையும் மற்ற திரை நட்சத்திரங்களையும் எப்போதும் பாதிக்கும் ஒன்று. அப்படித்தான் சமீபத்தில் இயக்குனர் மனோபாலா,நடிகர்  மயில்சாமி ஆகியோரின் மரணங்களும் நிகழ்ந்தன. இதனிடையே சமீபத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் மரணமடைந்ததை தொடர்ந்து, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மற்ற சேனல்களை விட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் விதமே அதற்குக் காரணம். அதே சமயம் 3 பிரபலங்களின் மரணத்திற்கு ஒரு மோசமான விஜய் டிவி நிகழ்ச்சி பொதுவான காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஸ்டார்ட் மியூசிக் விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ் பாண்டே தொகுத்து வழங்குகிறார்.

முழுக்க முழுக்க தமிழ் சினிமா பாடல்களை மையமாக வைத்து கலகலப்பாக வழங்கப்படும் நிகழ்ச்சி இது. சிரிப்புக்குப் பெயர் போன இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 பிரபலங்கள் இறந்துள்ளனர். சன் டிவியின் மொத்த டிஆர்பிக்குக் காரணமான எதிர்நீச்சல் மாரிமுத்துவை எப்படியாவது விஜய் டிவி சீரியலில் நடிக்க வைக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கடுமையாக முயற்சித்தது. ஆனால் எந்த திட்டமும் நிறைவேறாததால், கடைசியாக அவரை ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் பங்கேற்க வைத்தார்.

இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட நிலையில், நேற்று அவர் மரணமடைந்தார். மாரிமுத்துவின் மறைவுக்கு சில நாட்களுக்கு முன், பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மாரடைப்பால் மரணமடைந்தார். உலகநாயகன் கமல்ஹாசனின் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த இவர் மாரிமுத்து பங்கேற்ற அதே எபிசோடில் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சி ஒளிபரப்பான சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

Advertisment
Advertisements

ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் மாரிமுத்து ஆகியோருக்கு முன்பே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த வி.ஜே.சித்ரா அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய சித்ரா தற்கொலை செய்து கொண்டார். அந்த எபிசோட் கூட சித்ரா இறந்த சில வாரங்களுக்குப் பிறகு ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Star Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: