Advertisment

டேட்டிங் ரியாலிட்டி ஷோ : குகைக்குள் முன்னாள் காதலியை சந்தித்த போட்டியாளர் ; என்ன நடந்தது?

சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Sunny Leonam

சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சியின் புதிய எபிசோடில் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உள்ளே உள்ள  போட்டியாளர்களுக்கும் செம ட்விஸ்ட் காத்திருந்தது.

Advertisment

காதல், கேலி விளையாட்டுக்களுடன் கலகலப்பான அந்த வில்லா திடீரென பேக் ஸ்டாபிங், துரோகம் நிறைந்த நிகழ்ச்சியாக மாறிவிட்டது. காஷிஷ் மற்றும் ஆடியும் ஒரு போட்டிக்குத் தயாராகினர், ஆனால் ஆரக்கிள் பற்றிய ஆடியின் தயக்கம் அவர்களின் தொடர்பை பாதிக்கும் வகையில் அமைந்தது. சவாலான நேரத்தில், தனுஜ் ஸ்ப்ளிட்ஸ்வில்லன்களை அவர்களின் டேட்டிங் பற்றி பகிர்ந்து கொள்ள தூண்டினார்.

ஹர்ஷின் முன்னாள் காதலியான சுபி, தனது காதலை புதுப்பிக்கும் முயற்சியில் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். சன்னி லியோனிடம் தனது காதலர் ஹர்ஷ் தனியாக லவ் டென்னுக்கு சென்றது பற்றி ருஷாலி கூற, தனியாக சென்று அங்கே என்ன செய்கிறார் என்றும் கடந்த முறை நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே லவ் டென்னுக்கு சென்றிருந்தீர்கள் அப்போது என்ன செய்தீர்கள் என அனைவர் முன்பும் சொல்ல சொன்னார்.

VTP_7651.

அதற்கு வெட்கப்பட்ட ருஷாலி இருவரும் நன்றாக டேட்டிங் செய்தோம். எங்கள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத தருணமாக அந்த பொழுது இருந்தது என்று தான் ஹர்ஷ் உடன் கழித்த நேரத்தை அனைவர் மத்தியிலும் ருஷாலி பகிர்ந்து கொண்டார். யாரும் இல்லாத தனி அறையில் என்ன செய்யப் போகிறோம் என விரக்தியுடன் ருஷாலியிடம் ஓவர் சீன் போட்டு சென்ற ஹர்ஷ் அந்த குகையில் தனது முன்னாள் காதலி சுபியை பார்த்து ஷாக் ஆகி விட்டார்.

VTP_7651.

ருஷாலியை கழட்டி விட்டு விட்டு ஹர்ஷ் சுபியுடன் சென்று விடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் பார்க்கும் அளவுக்கு இந்த எபிசோடு உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த பயத்தையே சன்னி லியோன் முன் ருஷாலியும் தெரிவித்தார். ஹர்ஷை எப்படியாவது மடக்கி தன்னுடைய காதலை புதுப்பிக்க காதல் குகையில் காத்திருந்த சுபி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், ஹர்ஷ் அவரிடம் மன்னிப்பு கேட்டார். கடைசி வரை உறுதியாக நின்று, ருஷாலி மீதான தனது காதலை அறிவித்தார்.

VTP_7651.

டோம் அமர்வில், ருஷாலி தனியாக நின்று, உணர்ச்சிவசப்பட்டு, ஹர்ஷுடன் தன் எதிர்காலம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சன்னி லியோன் ருஷாலிக்கு சில ஆலோசனைகளை வழங்கினார், "உங்கள் காதல் வலுவாக இருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் காதலர் உங்களிடம் வந்து சேர வேண்டும் என்றால் அது அப்படியே நடக்கும். இல்லை என்றால் அவர் உங்களுக்கானவர் இல்லை என்று கூறியுள்ளார். ஹர்ஷ் ருஷாலிக்காக நின்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

எம் டிவி மற்றும் ஜியோ சினிமா ஓடிடி சேனலில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த டேட்டிங் ஷோவை கண்டு ரசிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sunny Leone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment