சூப்பர் சிங்கர் மகுடம்: யார் இந்த கிரிஷாங்? ரூ60 லட்சம் வீடு பரிசு

நீ இப்படியே சென்றால், சுமார் 70 அல்லது 80 வருடங்கள் பாடலாம் என்று கூறி நீ தான் குட்டி எஸ்பிபி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உலக அரங்கில் அறிமுகம் தேவையில்லை. ஏராளமாக திறமையாளர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்கள் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமாக உள்ளர்.

அதேபோல் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல்வேறு தரப்பினரும் கவனித்து வருகின்றனர். இதில் பங்கேற்றுள்ள சிறுவர்கள் பலரும் நடுவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவம் வகையில் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 8-வது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பல இளம் பாடகர்கள பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதில் 3-வது இடம் நேஹாவுக்கு கிடைத்தது. அவருக்கு 3 லட்சம் ரொக்கம் 5 சவரன் தங்க காயின் வழங்கப்பட்டது. அடுத்து மக்கள் அளித்த வாக்கின்படி முதலிடம் பிடித்த ரிஹானாவுக்கு 2-வது பரிசாக 5 லட்சம் ரொக்கம் வழக்கப்பட்டது. தனது பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த கிரிஷாங் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டம் வென்றார்.

இதில் அவருக்கு 60 லட்சம் மதிப்பிலான வீடு வழங்கப்பட்டது. பரிசை வழங்கிய யுவன் சங்கர் ராஜா, விரைவில் கிரிஷாங் தனது இசையில் பாடுவார் என்று கூறினார். அவரின் இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதன் மூலம் தற்போது கிரிஷாங் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக கிரிஷாங்க சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் பாடியபோது நடுவாராக பங்கேறற்  எஸ்பிபி சரண் நீதான் குட்டி எஸ்பிபி என்று கூறியிருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட ஜெய்பீம் படம் ஆஸ்கார் பட்டியலிலும் இணைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற தலைகோதும் இளங்காத்து என்ற பாடலை கிரிஷாங் சிறப்பாக பாடி அசத்தினார். பாடலை பாடி முடித்தவுடன், நடுவர்களாக பங்கேற்ற பாடகி சித்ரா, பாடகர் ஷங்கர் மகாதேவன்,கல்பனா உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர்.

இந்த பாடலை கிரஷாங் பாடும்போதே எமோஷனல் ஆகி கண்கலங்கிய எஸ்பிபி சரண் வெறும் பாராட்டோடு நிறுத்திவிடாமல், நீ இப்படியே சென்றால், சுமார் 70 அல்லது 80 வருடங்கள் பாடலாம் என்று கூறி நீ தான் குட்டி எஸ்பிபி என்றும் நீ கடவுளின் குழந்தை என்றும் பாராட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

அவர் குட்டி எஸ்பிபி என்று கூறியபடியே தற்போது கிரிஷாங் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil reality show super singer 8 title winner update in tamil