சின்னத்திரையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது எதாவது ஒரு வகையில் இணையத்தில் பிரபலமடைந்து வருகின்றனர்.
அதேபோல் ஒரு நிகழ்ச்சி ஹிட் அடித்துவிட்டால் அதே நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு கொண்டு செல்லும் விஜய் டிவி கடந்த பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்துள்ள நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் சீனியர் என இரு பிரிவிலும் நடத்தப்படுகிறது
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கு திரைத்துறையில் பலர் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதனால் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் திறமை உள்ள பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர்களாக பிரியங்கா மாகாபா ஆனந்த் ஆகியோர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 9-வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருபவர் டி.ஜே.பிளாக். நிகழ்ச்சிக்கு இடையில் காமெடி டைலாக் மற்றும் பாடல்களை ஒலிக்க செய்து சிரிப்பலையை ஏற்படுத்தும் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். பலருக்கும் பல காமெடி மற்றும் பாடல்களை போட்:டு உற்சாகப்படுத்தும் டி.ஜே.பிளாக் இந்த சீசனில் பூஜாவிற்கு போடும் பாடல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பூஜாவின் அம்மா, நீங்கள் செய்வது சரியில்லை. ஒரு பெண்ணை குறித்து இப்படி பாடல் போடுவது எனக்கு வருத்தமாக உள்ளது என்று கூறியிருந்தார். இதை கேட்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், டி.ஜே.பிளாக் ஷாக்காகி நின்றார்.
அதன்பிறகு இது ப்ராங்க் என்று அனைவரையும் அதிர வைத்தார் பூஜா அம்மா. இதனிடையே பூஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் டி.ஜே.பிளாக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நீங்கள் அனைவரும் இந்த ப்ராங்கை எஞ்சாய் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“