இதுதான் சாதனை… சூப்பர் சிங்கர் பிரியங்காவின் அடுத்த அவதாரம் மாஸ்!

Super Singer Priyanka : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பிரியங்கா தற்போது தனது மருத்துவ சேவையை தொடங்கியுள்ளார்.

Tamil Reality Show Super Singer Priyanka Doctor : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பிரியங்கா தற்போது மருத்துவ சேவை தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிட்ஷோவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். அந்த வகையில் விஜய்டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-ல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பிரிங்கா. இந்த நிகழ்ச்சியின் முன்னணியில் வந்த அவர் இறுதிச்சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும், அவரது பாடல் மூலம் ரசிகர்கள் கூட்டத்தில் அதிகப்படுத்தியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையிலும், மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யுடன் மேடை நிகழ்ச்சியிலும் பாடியுள்ளார். பாடகிக்கு வாய்ப்பு கிடைத்தாலும் இடையில் மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள பிரியங்கா, கடந்த 2018-ம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்தார் அதனைத் தொடர்ந்து மருத்துவமனை தொடங்க முயற்சித்த அவருக்கு கொரோனா தொற்று தடை போட்டது.

ஆனால் தற்போது தனது மருத்து சேவையை தொடங்கியுள்ள பிரியங்கா, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பணிக்காக அவரது ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகினறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality show super singer priyanka started medical service

Next Story
படப்பிடிப்புக்கு இடையில் ரஜினியுடன் சந்திப்பு : மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express