/tamil-ie/media/media_files/uploads/2021/03/super-singar.jpg)
Tamil Reality Show Super Singar Muthusirpi : தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு. அதிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர்போன விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஷோக்களுக்கு ரசிகர்கள் எப்போது தனி வரவேற்பு அளிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் விஜய் டிவியில், சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
நகர் புறங்களில் சினிமா பாடல்களை பாடிக்கொண்டிருக்கும், பாடகர்களுக்கு மத்தியில், கிராமபுறங்களில் உள்ள சிறந்த பாடகர்களுக்கு சிறந்த அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுக்கும் இந்த ஷோ பல நாட்டுப்புற கலைஞர்களுக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில் மேடை நாடகங்களில் சுமார் 5000 பாடல்களுக்குமேல் பாடியுள்ள பாடகர முத்துசிற்பி, தற்போது விஜய் டிவி சூப்பர் சிங்கரில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் தனது அசத்தலான பாடல் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ள முத்துசிற்பிக்கு தற்போது, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் வரும் வாரம் (இன்று மற்றும் நாளை) நடைபெறவுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நடிகர் ரியோ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களான கலந்துகொண்டுள்ள நிலையில், முத்துசிற்பி பாட்டு பாடி முடித்தபின்னர் உருக்கமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
நீங்க Great sir! ????
சூப்பர் சிங்கர் - வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SuperSinger#FolkRound#VijayTelevisionpic.twitter.com/QrkRUtIA8C
— Vijay Television (@vijaytelevision) March 5, 2021
அப்போது அவர் கூறும்போது, தான் நாடகத்தில் பாடி சம்பாதித்த பணத்தையெல்லாம் முதலீடாக போட்டு சில ஆல்பம் பாடல்களை செய்ததாக கூறியுள்ளார். இது குறித்து நடிகர் ரியோ, “வெகுசிலர் மட்டும் தான், தாங்கள் கலைகள் மூலம் சம்பாதித்த பணத்தை கலைகளிலேயே முதலீடாக்குவார்கள். நீங்கள் ஒரு ஆத்மார்த்தமான கலைஞர்” கூற, முத்துச்சிற்பி கண்கலங்குகிறார்.இந்த புரமோ தற்போது வைரலாகிவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.