Survivor Show Update : தற்போதைய நிலையில் முன்னணி நடிகர்கள் பலரும் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இதில் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உயர்ந்துள்ள நிலையில், முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்தரையில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை மற்றொரு முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
Advertisment
அந்த வகையில் ஜீ தமிழில் வரவுள்ள சர்வைவர் நிகழ்ச்சியை முன்னணி நடிகரான அர்ஜூன் தொகுத்து வழங்க உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு ஒரு வீட்டில் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கொடுக்கும் டாஸ்க்குளை செய்ய வேண்டும் என்பது விதி. ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சி 5வது சீசனை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. யாரும் இல்லாத ஒரு தீவில் எவ்வித தொடர்பு சாதனங்களும் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத போட்டியாளர்கள் அந்த தீவிலிருந்து தப்பிக்க வேண்டும். இதற்கிடையே நிகழ்ச்சி தொகுப்பாளர் கொடுக்கும் டாஸ்க்குகளையும் செய்ய வேண்டும். பிக்பாஸ் போலவே 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி குறித்து முதல் ப்ரமோ கடந்த சில வாரங்களுக் முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி இதில் போட்டியாளர்களாக விஜயலக்ஷ்மி, விக்ராந்த், பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி), ஸ்ருஷ்டி டாங்கே, நந்தா, விஜே பார்வதி, ஸ்டண்ட் நடிகர் பெசன்ட் ரவி, நடிகர் தம்பிராமையா மகன் உமாபதி ராமையா ஆகியோர் இந்த ப்ரமோ வீடியோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில போட்டியாளர்கள் இடம்பெறுவார்கள் என்று அவர்கள்யார் என்பது குறித்து வரும் நாட்களில் அற்விக்கப்படும் என எதிர்பார்க்ப்படுகிறது.
Advertisment
Advertisements
போட்டியாளர்கள் அனைவரும் ஆப்ரிக்காவில் ஒரு தீவில் 100 நாட்கள் தங்கி அங்கிருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல், தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil