என்னமோ பெருசா பிளான் பண்றாங்க… சன் டிவி புதிய ரியாலிட்டி ஷோ

Reality Show : டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தில் இருக்கும் சன் தொலைக்கட்சியில் புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக உள்ளது.

சீரியல்களை போலவே ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு உள்ளது. விஜய் டிவி, ஜீ தமிழ், இந்த இரு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு ஷோக்களை நடத்தி வருகின்றன. சீரியல்களில் நம்பர் 1 ஆக இருக்கும் சன்டிவியால் விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு இணையாக ஹிட் ஷோக்கள் தரமுடிவதில்லை. அதுவும் விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிலாம் வேற லெவலில் வெற்றி பெற்றது. இதனால் சன்டிவி பார்வையாளர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. தற்போது நாடகங்களை போலவே மற்ற நிகழ்ச்சிகளிலும் சன்டிவி கவனத்தை திருப்பியுள்ளது. மக்களை கவரும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

பொதுவாக சன்டிவியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மிக பிரம்மாண்டமாக இருக்கும். தற்போது லேட்டஸ்டாக வந்த அப்டேட் படி சன்டிவி ஒரு புதிய ரியாலிட்டி ஷோவை விரைவில் ஒளிபரப்ப உள்ளது. நிகழ்ச்சிக்கு ‘பூவா தலையா’ என பெயர் வைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட செட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகளை வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அவர்களின் காமெடி, பாடல், நடனம் என கலக்கலாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது.

நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்கிற விவரம் விரைவில் வெளியாகும். எல்லா தொலைக்காட்சிகளிலும் புதிய ஷோக்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது சன் டிவியிலும் புதிய நிகழ்ச்சி வரப்போகிறது.

நிகழ்ச்சியின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் பலரும் இப்போதே என்ன நிகழ்ச்சி, யார் போட்டியாளர்கள் என இன்ஸ்டாவில் கமெண்ட் செய்து வருகின்றனர். ஷோ எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality show update sun tv new reality show poova thalaiya

Next Story
‘உங்க கெட்டப்ல இதுதான் மொக்கையா இருக்கு’ அப்படி என்ன செய்தார் முல்லை?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com