Advertisment

பிக் பாஸ் 5: கமல்ஹாசனுக்கு பதில் அந்த நடிகராமே... செம்ம மாஸ்தான்!

Tamil Bigboss : விஜய் டிவியின் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை கமல்ஹாசனுக்கு பதிலாக முன்னணி நடிகர் ஒருவர் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
Mar 22, 2021 16:20 IST
பிக் பாஸ் 5: கமல்ஹாசனுக்கு பதில் அந்த நடிகராமே... செம்ம மாஸ்தான்!

Tamil Reality Show Bigboss Kamalhaasan Or Simbu : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை கமல்ஹாசனுக்கு பதிலாக முன்னணி நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேறபு உள்ளது. இதில் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலம். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்கள் கொடுக்கும் வாக்குகள் அடிப்படையில் வாரத்தின் இறுதி நாட்களில் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள நிலையில், பலருக்கும் சினிமா வாய்ப்புகளும் தேடி வருகின்றன. இதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனுக்காக போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுவரை நடைபெற்ற 4 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது 5-வது சீசனை கமலுக்கு பதிலாக முன்னணி நடிகர் ஒருவர் தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சினிமா தொடர்பான பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்த கமல்ஹாசன், கடந்த 2018-ம் ஆண்டு முதல் அரசியல் கட்சி தொடங்கி, மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனால் கமல் தீவிர தேர்தல் பணிகளில் உள்ளதால், பிக்பாஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத நிலை உள்ளது.

publive-image

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிம்புவும் ஆர்வம் காட்டி வருவதாகவும், தகவல் வெளியாகியள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளாகளின் கோபத்திற்கு ஆளாகி சரியான படவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்த நடிகர் சிம்பு தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார். மேலும் கடந்த பொங்கல் தினத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு போட்டியாக வெளியான சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பில் உள்ள சிம்பு, அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் வெளியான மப்டி படத்தின் தமிழ் ரீமேக்கான பத்து தல படத்தில்  கெளதம் கார்த்திக்குடன் இணைந்து ‘நடிக்க உள்ளார். இதற்கு இடையில் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

#Tamil Reality Show #Tamil Bigboss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment