scorecardresearch

ஃப்ளைட்டில் மாலத்தீவு பயணம்: பிரியங்கா; மா.கா.பா; அப்புறம் வாசிம் அக்ரம்!

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும் தற்போதைய நிலையில், தொகுப்பாளினி என்றால் அது பிரியங்கா தேஷ்பாண்டே தான்.

ஃப்ளைட்டில் மாலத்தீவு பயணம்: பிரியங்கா; மா.கா.பா; அப்புறம் வாசிம் அக்ரம்!

விஜய் டிவியின் தொகுப்பாளர்களான மா.கா.பா மற்றும் பிரியங்கா இருவரும் மாலத்தீவு சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியின் பல ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஷோக்கள் மட்டுமல்லாமல், இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் என பலருக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சிகளும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும் தற்போதைய நிலையில், தொகுப்பாளினி என்றால் அது பிரியங்கா தேஷ்பாண்டே தான். தொகுப்பாளியாக இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 2-வது இடம் பிடித்து அசத்தினார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தாலும், ப்ரீ நேரங்களில் வெளியில் சக தொகுப்பாளர்களுடன் சுற்றுலா செல்வது பிரியங்காவின் வழக்கம். அந்த வகையில் இவர் அவ்வப்போது வெளியிடும் வீடியோ பதிவுகள் இணையத்தை கலக்கும். அதேபோல் தற்போது பிரியங்கா மாகாபாவுடன் இணைந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் அவர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம், அவர்களுடன் பயணித்துள்ளார். இதை அறிந்து இன்ப அதிர்ச்சியாகும் பிரியங்கா அவருடன் போட்டோ எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil reality show vj priyanka deshpande in maldives with makapa