விஜய் டிவி பிரியங்கா கடத்தலா? வீடியோ வைரல்... உண்மை நிலவரம் என்ன?

தற்போது விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை பிரிங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை பிரிங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyanka Deshpande

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவியின் தொகுப்பாளி பிரியங்கா தேஷ்பாண்டே காணாமல்போய்விட்டதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பது போன்று உள்ள அந்த காட்சியில் அவர் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பெரும்பாலும் விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 2-வது இடம் பிடித்த இவர், அதன்பிறகு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் திரும்பினர். பிக்பாஸ் வீட்டில் இவர் அனைவருடனும் பழகிய விதம் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனிடையே தற்போது விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை பிரிங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இது தொடர்பாக வெளியாகியுள்ள ப்ரமோ தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ப்ரமோவில் பிரியங்கா மருத்துவமனையில் இருந்தபடி தட்டு நிறைய சாப்பாட்டை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது யாரோ வருவர் அறைக்கு வந்து பிரியங்காவை கடத்திச்சென்று நாற்காலியில் கட்டி வைத்திருப்பது போன்று ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

அடிக்கடி சீரியல் எப்சோடுகளை கையில் எடுக்கும் ஸ்டார்ட் மியூசிக் டீம் இந்த முறை தென்றல் வந்து என்னை தொடும் சீரியலை கையில் எடுத்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சீரியலில் கடந்த வார எபிசோட்டில் அபியை ரௌடிகள் கடத்தி சென்றுவிட வெற்றி அவரை காப்பாற்றி கரை சேர்க்கிறார். அதேபோல் பிரியங்காவை காப்பாற்ற இங்கு யார் வரப்’போகிறார் என்பது கேள்வியாக உள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Vj Priyanka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: