Tamil RealityShow Update : தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வரவேற்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் விஜய் டிவி அதிகப்படியான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் பிரபலாக இருந்து வரும் நிலையில், ஆண்டு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக ரசிகர்களை பெற்ற ரியாலிட்டி ஷோவாக உள்ளது.
Advertisment
கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோ தற்போது 4 சீசன்கள் முடிந்து 5-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஷோவுக்கு கிடைக்கும் பெரும் ஆதரவை பயன்படுத்திக்கொள்ளும் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. பிக்பாஸ் போன்றே இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கடந்த பிக்பாஸ் சீசனில் கடைசிகட்டத்தில் வெளியேறிய அனிதா சம்பத் ஷாரிக்குடன் இணைந்து நடனமாடி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இவர்களின் நடனம் பெரிய அளவில் ரீச் ஆகி வரும் நிலையில் தற்போது இந்நிகழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள ப்ரமோ கண்களை கட்டிக்கொண்டு நடனமாடும் அனிதா சம்பத் நடனம் முடிந்தவுடன், அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும். அதை இன்னிறிலுந்து நான் தொடங்கி வைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த பரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனிதா சம்பத் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓரிரு நாட்களில் அவரது தந்தை மரணமடைந்தார். அதன்பிறகு எவ்வித நிகழ்ச்சியிலும் பங்கேற்காத இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil