Tamil Realtiy Show Cook With Comali Season 3 Update : ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளிக்கு முக்கிய இடம் உண்டு. சமையலுடன் சேர்ந்து காமெடியில் கலக்கி வரும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 2 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் முதல் சீசனை விட 2 வது சீசனுக்கே ரசிகர்கள் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்துகொண்ட புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை ஷரத், விஜே பார்வதி, சக்தி உள்ளிட்டோர் காமெடியில் அதகளம் செய்தனர். அவர்களுக்கு இணையாக குக்குகளாக பங்கேற்ற ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா, லட்சுமி, தீபா, கனி உள்ளிட்டோர் சமையலுடன் சேர்ந்து செய்த காமெடி பெரிய வைரலானது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த சீசன் முடிவுக்கு வந்தாலும் இந்நிகழ்ச்சி இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த நிகழ்சச்சியின் 3வது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் தொடங்கும் என்று தகவல் கசிந்தது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்களின் கேள்வி அதிகமாக தொடங்கியது. ஆனாலும் அடுத்து தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகினறன.
தற்போது பிக்பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்து குக் வித் கோமாளி சீசன் 3-ன் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீச்ன தொடங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இதில் யார் யார் பங்கேற்கின்றனர் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது குக் வித் கோமாளி சீசன் 3-ன் புகைப்படம் வெளியாகியுள்ளது. தங்கதுரை மற்றும் சுனிதா வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் தங்கதுரை மற்றும் சுனிதா இருவரும் வித்தியாசமான லுக்கில் இருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சி பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil