ஒரு முட்டையை வைத்து ஒரு ஆம்லேட்தான் போட முடியும் என்றாலும், அதனுடன் ஒரு ஒரு உருளைக்கிழங்கை சேர்த்தால், 4 பேர் சாப்பிடும் வகையில் ஒரு ஆம்லேட் செய்யலாம் தெரியுமா?
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் – 1
குடை மிளகாய் – 1
முட்டை – 1
உப்பு – தேவையான அளவு
சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மல்லி, கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி நன்றாக கழுவி எடுத்துக்கொண்டு அதனை, பீட்ரூட் சீவும் கட்டையில் வைத்து சீவி எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு வெங்காயத்தை நறுக்கி எண்ணெயில் வதக்கி, அதனுடன் உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து சேர்த்து வதக்கவும்.
ஒரு பவுலில், முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன், குடைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லி கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையுடன் வெங்காயம் உருளைக்கிழங்கு கலவையை சேர்த்தால் சிறிது கெட்டியான கலவை கிடைக்கும்.
இந்த கலவையை தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அதில் தோசை மாதிரி ஊற்றி எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு ஆம்லேட் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“