Tamil Rockers 2019 leaked nerkonda paarvai full movie: சினிமா உலகினருக்கு வார இறுதி நாட்கள்தான் கொண்டாட்டம். காரணம், தியேட்டர்களுக்கு கூட்டம் திரண்டு வருகிற நாட்கள் அவைதான். ஆனால் இப்போது அந்தக் கொண்டாட்டத்தை தமிழ் ராக்கர்ஸ் தனதாக்கிக் கொண்டிருக்கிறது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் முதல் டி.வி. சீரியல் வரை எதையும் தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை.
சினிமா உலகுக்கு மட்டுமல்ல, டி.வி. சீரியல்களுக்கும்கூட தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மிரட்டல் விடுப்பதாக இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் புதிய திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸாகிறதோ இல்லையோ, தமிழ் ராக்கர்ஸில் ஒரே கொண்டாட்டம்தான். ஹாலிவுட் சினிமா, இந்தி சினிமா, தெலுங்கு சினிமா, மலையாள சினிமா, தமிழ் சினிமா, டி.வி சீரியல் என அனைத்தையும் இணையத்தில் பந்தி வைத்துவிடுகிறது.
Tamil Rockers 2019 Leaked tamil movies To Free download: நேர்கொண்ட பார்வை, கோமாளி படங்கள்
அண்மையில் வெளியான நேர்கொண்ட பார்வை, கோமாளி படங்கள் தமிழ் ராக்கர்ஸ் பிடிக்கு தப்பவில்லை. அதைத் தொடர்ந்து வெளியான முனிரத்னா குருஷேத்ரா வரை தமிழ் ராக்கர்ஸால் சூறையாடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே பிக் பாஸ் தமிழ் , பிக் பாஸ் தெலுங்கு தொடர்களையுடன் உடனுக்குடன் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு, டி.வி உலகினரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறது.
அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை படத்தை மறுநாளே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. திடீரென வார இறுதி ஸ்பெஷலாக அதன் ஹெச்.டி பிரிண்டையும் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது. தமிழ் ராக்கர்ஸுக்கு கடிவாளம் போட நீதிமன்றம் மூலமாக தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்தாலும் அது பலிக்க வில்லை. அவ்வப்போது தனது இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் இந்த அட்டுழியத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
திருடனாய் பார்த்து திருந்தினால்தான் உண்டு போல!