scorecardresearch

ஓடிடி-யில் க/பெ ரணசிங்கம்: 2 மணிநேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் லீக்

இப்படத்தை டி.டி.எச் சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது ஜீ ப்ளெக்ஸ் ஆப்பை பயன்படுத்தியோ பார்க்கலாம்.

Ka Pae Ranasingam tamilrockers, Ka Pae Ranasingam Aishwarya Rajesh Vijay Sethupathi
தமிழ் ராக்கர்ஸில் க/பெ.ரணசிங்கம்

Ka Pae Ranasingam Tamilrockers: தமிழ் திரைப்படமான க/பெ.ரணசிங்கம் இந்தியாவில் ஓடிடி-யில்  வெளியானது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜீ ப்ளெக்ஸ் இயங்குதளத்தில் படம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்குத் ரிலீஸானது. ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் திருட்டுத் தளமான தமிழ் ராக்கர்ஸில் பதிவிறக்கம் செய்யப் பட்டது. இந்த திருட்டு வலைத்தளத்தில், சப் டைட்டிலுடன், ஹெச்.டி க்வாலிட்டியில், க்ளியராகவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறி கிராம சபைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

Ka Pae Ranasingam on Tamilrockers

விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பி.விருமாண்டி இயக்கியுள்ளார். ஒரு பார்வைக்கு ரூ .199 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்படத்தை டி.டி.எச் சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது ஜீ ப்ளெக்ஸ் ஆப்பை பயன்படுத்தியோ பார்க்கலாம். 199 ரூபாய் செலுத்தி படத்தை வாங்கியதும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் எந்த நேரத்திலும் அதைப் பார்க்கலாம். ஒரு முறை பார்க்கத் தொடங்கிவிட்டால்,  அடுத்த ஆறு மணிநேரங்களுக்கு மட்டுமே அந்த லிங்க் ஆக்டிவாக இருக்கும்.

அக்டோபர் 5ம் தேதி முதல் மீண்டும் ஆரம்பமாகிறது சென்னை புறநகர் ரயில் சேவை!

க/பெ ரணசிங்கம் முதல் காட்சி இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.

தவிர, அனுஷ்கா-மாதவன் நடித்துள்ள நிசப்தம் திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil rockers leaked ka pae ranasingam tamilrockers vijay sethupathi aishwarya rajesh