Advertisment

இருட்டு... திருட்டு..! அடங்காத தமிழ் ராக்கர்ஸ்

Tamil Rockers News: என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், தமிழ்ராக்கர்ஸ் தனது இணையதள முகவரிகளை அடிக்கடி மாற்றிவிடுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TamilRockers Darbar movie download, rajinikanth darbar, Darbar full movie download, Darbar tamil movie download, தர்பார் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்

tamilrockers.ws.com, tamil gun movie 2020 download, tamil songs download isaimini, தமிழ் ராக்கர்ஸ், தமிழ் ராக்கர்ஸ் தமிழ் மூவி டவுன்லோடு

Tamil Rockers VS Tamil Movies: கொரோனா விடுப்பை பயன்படுத்தி திரைப்படங்கள் முதல் வெப் சீரியல் வரை அனைத்தையும் அள்ளிப் போட்டு கொண்டாடித் தீர்க்கிறது தமிழ் ராக்கர்ஸ். லேட்டஸ்டாக சுந்தர்.சி-யின் த்ரில் படமான இருட்டு படத்தையும் ஹெச்.டி தரத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

Advertisment

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மொத்த திரையுலகத்திற்கே வில்லனாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்ப் படங்கள், மலையாளம், தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் படங்கள் மட்டுமல்லாமல், வெப் சீரிஸ்கள் வரை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.

Tamil Rockers Tamil Movie Download Issues: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்

கொரோனா லாக் டவுன் காரணமாக தற்போது தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன. படப்பிடிப்பு எதுவும் இல்லை. புதுப் படங்கள் ரிலீஸும் இல்லை. எனினும் வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களை குறிவைத்து முந்தையை ஹிட் படங்களின் ஹெச்.டி பிரிண்ட்களை தனது இணையதளத்தில் பதிவேற்றி வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.

சுந்தர் சி நடிப்பில் இசட் துரை இயக்கத்தில் கடந்த டிசம்பரில் வெளியான இருட்டு படத்தை அண்மையில் பதிவேற்றியிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். திரில் படமான இருட்டு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஆகும்.

இதேபோல ரசிகர்கள் பணம் செலுத்தி பார்க்க வேண்டிய நிலையில் உள்ள வெப் சீரியல்கள் பலவற்றையும் பந்தி வைக்கிறது தமிழ் ராக்கர்ஸ். தொடக்கத்தில் தமிழ் ராக்கர்ஸின் இந்தத் திருட்டுக்கு எதிராக கொந்தளித்த தமிழ் சினிமா உலகம், இப்போது கண்டு கொள்ளவில்லை. காரணம், என்னென்னவோ முயற்சிகள் எடுத்தும் தமிழ் ராக்கர்ஸை ஒன்றும் செய்ய முடியவில்லை.

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், தமிழ்ராக்கர்ஸ் தனது இணையதள முகவரிகளை அடிக்கடி மாற்றிவிடுகிறது. இதனால் அதை முடக்கவும் முடியவில்லை. தமிழ் ராக்கர்ஸுக்கு எப்போது முடிவு என யாருக்கும் தெரியவில்லை.

 

 

Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment